• Mar 11 2025

நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை - மக்களே அவதானம்..!!

Tamil nila / Mar 16th 2024, 7:17 am
image

நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும்  நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுகின்றமையால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கமைய  காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை - மக்களே அவதானம். நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும்  நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படுகின்றமையால் மக்களை அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.இதற்கமைய  காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து மக்கள் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement