• Apr 25 2025

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: கோட்டபாய ராஜபக்ச கைது?

Sharmi / Apr 24th 2025, 10:25 am
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என வெளியான செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர அரசின் உயர்மட்டத் தரப்பில் இருந்து அறியமுடிகின்றது.

அத்துடன் அந்தப் பிரதான சூத்திரதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றவே 2019 ஆம் ஆண்டில் ஒரு தரப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திதாரி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: கோட்டபாய ராஜபக்ச கைது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் கைது செய்யப்படலாம் என வெளியான செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அநுர அரசின் உயர்மட்டத் தரப்பில் இருந்து அறியமுடிகின்றது.அத்துடன் அந்தப் பிரதான சூத்திரதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக தென்னிலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கொண்டு அவற்றைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றவே 2019 ஆம் ஆண்டில் ஒரு தரப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திதாரி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement