கிழக்கில் 85 வீதமான பாடசாலைகள் இயங்கியது- ஆளுனர் அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் இன்று (27) இயங்கும் பாடசாலைகளின்  85%  வீதம் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.


அதன்படி கிழக்கு மாகாணத்திலுள்ள 1122 பாடசாலைகளில் 951 பாடசாலைகள் எவ்வித தடையுமின்றி இன்று இயங்க முடிந்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் 17 கல்வி வலயங்களில் அதிபர்களின் வருகை 85% ஆக பதிவாகியுள்ளது.

மேலும் ஆசிரியர்களின் வருகை 58.9% ஆகவும் மாணவர்களின் வருகை 60.9% ஆகவும் பதிவாகியுள்ளது.

பாடசாலை கல்வி சாரா ஊழியர்களின் வருகை 72.95% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண ஆளுனர் மேலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை