கஹட்டகஸ்திகிலிய, கொன்வெவ மற்றும் படரெல்லேவ ஆகிய கிராமங்களில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானைகள் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதாகவும் இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், பங்வெல்ல, தெகெதிபொத்தானை, கிம்புல்பெத்தியாவ, தெமடவெவ போன்ற கிராமப்புறங்களில் இரவு பகலாக யானைகள் சுற்றித்திரிவதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் பல வருடங்களாக அரச அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் அறிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
யானைகளின் அச்சுறுத்தல் அதிகரிப்பு; கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்பு கஹட்டகஸ்திகிலிய, கொன்வெவ மற்றும் படரெல்லேவ ஆகிய கிராமங்களில் யானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.யானைகள் கிராமத்திற்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்வதாகவும் இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், பங்வெல்ல, தெகெதிபொத்தானை, கிம்புல்பெத்தியாவ, தெமடவெவ போன்ற கிராமப்புறங்களில் இரவு பகலாக யானைகள் சுற்றித்திரிவதால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.இது தொடர்பில் பல வருடங்களாக அரச அதிகாரிகளுக்கு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் அறிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.