• May 03 2024

அவசர ஜனாதிபதி தேர்தல்! பணமதிப்பீடு செய்ய ஜனாதிபதி உத்தரவு..!samugammedia

Sharmi / Jul 22nd 2023, 1:53 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டாலும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான நிதியை அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம்.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை கடந்த வார இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று ஆணைக்குழுவிடம் கேட்டுள்ள ஜனாதிபதி, இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் பணத்தை உள்ளடக்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் இங்கு தெரிவித்துள்ளனர்.

அதனை விரைவில் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவரும் நிதியமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர ஜனாதிபதி தேர்தல் பணமதிப்பீடு செய்ய ஜனாதிபதி உத்தரவு.samugammedia ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டாலும், அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அதற்கான நிதியை அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எம்.எல். ரத்நாயக்க மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை கடந்த வார இறுதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று ஆணைக்குழுவிடம் கேட்டுள்ள ஜனாதிபதி, இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை தயார் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் பணத்தை உள்ளடக்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் இங்கு தெரிவித்துள்ளனர்.அதனை விரைவில் நிதி அமைச்சுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, நிதி அமைச்சுடன் கலந்துரையாடுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.இக்கலந்துரையாடலில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரியொருவரும் நிதியமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement