இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதுமுக வீரர் ஒல்லி ரொபின்சனுக்கு தற்காலிக தடை

92

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் புதுமுக வீரர் ஒல்லி ரொபின்சனை அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதற்கு இங்கிலாந்து கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

கடந்த 2012 முதல் 2013 ஆண்டு வரை அவர் தமது டுவிட்டர் கணக்கில் இன ரீதியான மற்றும் பாலினம் தொடர்பான சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றியிருந்தார்.

இதனையடுத்து ஒழுக்காற்று விசாரணையினை முடிவு கிடைக்கும் வரை இவ்வாறு தற்காலிக கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது.

அதேநேரம் வேகபந்து வீச்சாளரான ஒல்லி ரொபின்சனை நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற தமது முதலாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

எனினும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக கிரிக்கெட் தடையால் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியில் உள்ளீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: