• Oct 02 2024

ஈ.பி.டி.பியினர் மதுபோதையில் இன்று யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை ஒரு கேவலமான செயல் - ரஜீவ்காந்த் SamugamMedia

Chithra / Mar 25th 2023, 3:57 pm
image

Advertisement

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் தலைமையில் இன்று யாழில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் இணைந்து கொள்ளவில்லை என்ற அறிவிப்பினை ஏற்றுக்கொள்வதாக அரசியல் செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.

எமது சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு பிரத்தியேகமாக இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

தமிழினம் தொடர்ச்சியாக சிங்களவர்களாலும் இனவாதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த உணர்வுகளை வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் மதிக்கவேண்டும் என்றும் ரஜீவ்காந்த் குறிப்பிட்டிருந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தினர் இந்த போராட்டத்தில் இணையவில்லை என்றாலும் தொடர்ந்து அவர்களை இணைப்பதற்கான முயற்சிகளை வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கவேண்டும் என்றும் ரஜீவ்காந்த் வலியுறுத்தியிருந்தார்.

ஒரு அமைப்பு என்ற ரீதியில் யாழ் பல்கலைகழகம் எடுத்த தீர்மானத்தை மதிப்பதாக தெரிவித்த ரஜீவ்காந்த் இந்த பொதுக் கருத்தரங்கு யாழில் ஆரம்பமாகியிருந்தபோது ஈ.பி.டீ.பியினர் மதுபோதையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது ஒரு கேவலமான செயல் என்றும் வன்மையாக கண்டனம் வெளியிட்டிருந்தார்.


ஈ.பி.டி.பியினர் மதுபோதையில் இன்று யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை ஒரு கேவலமான செயல் - ரஜீவ்காந்த் SamugamMedia அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகேயின் தலைமையில் இன்று யாழில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர் இணைந்து கொள்ளவில்லை என்ற அறிவிப்பினை ஏற்றுக்கொள்வதாக அரசியல் செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.எமது சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு பிரத்தியேகமாக இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.தமிழினம் தொடர்ச்சியாக சிங்களவர்களாலும் இனவாதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த உணர்வுகளை வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் மதிக்கவேண்டும் என்றும் ரஜீவ்காந்த் குறிப்பிட்டிருந்தார்.யாழ் பல்கலைக்கழகத்தினர் இந்த போராட்டத்தில் இணையவில்லை என்றாலும் தொடர்ந்து அவர்களை இணைப்பதற்கான முயற்சிகளை வசந்த முதலிகே தலைமையிலான குழுவினர் முன்னெடுக்கவேண்டும் என்றும் ரஜீவ்காந்த் வலியுறுத்தியிருந்தார்.ஒரு அமைப்பு என்ற ரீதியில் யாழ் பல்கலைகழகம் எடுத்த தீர்மானத்தை மதிப்பதாக தெரிவித்த ரஜீவ்காந்த் இந்த பொதுக் கருத்தரங்கு யாழில் ஆரம்பமாகியிருந்தபோது ஈ.பி.டீ.பியினர் மதுபோதையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.இது ஒரு கேவலமான செயல் என்றும் வன்மையாக கண்டனம் வெளியிட்டிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement