• Oct 30 2024

பருத்தித்துறையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள்!

Tamil nila / May 1st 2024, 6:35 pm
image

Advertisement

இன்று உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.


அதனடிப்படையில் ஈ.பி.டி.பியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமை தாங்கியிருந்தார். 


முன்பதாக மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது.

முன்பதாக மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி, பருத்தித்துறை நகரை நோக்கி .யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக வந்தடைந்திருந்தது.



இதேநேரம் மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பித்து பருத்தித்துறையை நோக்கி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது..

மேலும் தொழிற் சங்ககங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று உலக தொழிலாளர் தினமாகும். இந்த தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் (01) தமது மே தின நிகழ்வுகளை பருத்தித்துறையில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.அதனடிப்படையில் ஈ.பி.டி.பியின் இவ்வாண்டுக்கான தொழிலாளர் தினம் பருத்தித்துறை நகரில் பருத்தித்துறை பல நோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தலைமை தாங்கியிருந்தார். முன்பதாக மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக பருத்தித்துறை நகரை சென்றடைந்தது.முன்பதாக மேதின நிகழ்வுகளில் ஒரு அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலக முன்றலிலிருந்து அழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களின் பிரசன்னத்துடன் வாகனப் பேரணி, பருத்தித்துறை நகரை நோக்கி .யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதி வழியாக வந்தடைந்திருந்தது.இதேநேரம் மற்றொரு வாகன பேரணி கட்சியின் சாவகச்சேரியிலுள்ள பிரதேச அலுவலக முன்றலிலிருந்து பேரெழுச்சியுடன் ஆரம்பித்து பருத்தித்துறையை நோக்கி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதுஇதன்பின்னர் பலநோக்கு கூட்டறவு சங்க கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.இதன் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது உழைப்பாளர் தின செய்தி வாசிக்கப்பட்டதுடன் உறுதியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் தொழிற் சங்ககங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement