• May 08 2024

பருத்தித்துறை நகரசபை பாதீடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் தவிசாளர்!

Sharmi / Dec 21st 2022, 10:27 pm
image

Advertisement

15 உறுப்பினர்களை கொண்ட பருத்துத்துறை நகர சபையில் ஜந்து உறுப்பினர்களில் நான் உட்பட எங்கள் கட்சி அணியை தலைமை தாங்கி சபையை பொறுப்பெடுத்து எண்ணிக்கை பலம் குறைந்த குழுவாக இருந்தும்,பெரும் சிரமங்கள்,சவால்களை கடந்து முன்னெடுத்துள்ளதாக பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் யோசெப் இருதயராஜா தெரிவித்தார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

15 உறுப்பினர்களை கொண்ட பருத்துத்துறை நகர சபையில் ஜந்து உறுப்பினர்களில் நான் உட்பட எங்கள் கட்சி அணியை தலைமை தாங்கி சபையை பொறுப்பெடுத்து எண்ணிக்கை பலம் குறைந்த குழுவாக இருந்தும்,பெரும் சிரமங்கள்,சவால்களை கடந்து முன்னெடுத்துள்ளது. இதற்கு எனது கட்சி அங்கத்தவர்கள் மட்டும் காரணமன்றி சில மாற்று கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்களின் ஆதரவு முக்கியமாக நான் குறிப்பிடாது அறிந்து கொள்வீர்கள்.இவர்களது ஒத்துழைப்புக்கு எனது நேர்மையானதும்,அனைவரையும் அணைத்து நகர அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்பட்டமையே காரணமாகும்.

இந்த நகர சபை கலைக்கப்படுவதற்கு இன்னம் சிறிது காலமே இருக்கின்றது.உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் விரைவில் வர உள்ளது.அதை குறி வைத்து 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தோல்வியடையச் செய்து தமக்கான விளம்பரத்தை சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுத்தது மலிவான அரசியல் செய்ய முனைகின்றனர்.

சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் நகர அபிவிருத்திக்கான சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதற்கான பலரும் கருத்து தெரிவித்து இருக்கும் நிலையில்,தனது சுயநலம் காரணமாக எதிர்த்த ஒரே ஒரு கட்சி உறுப்பினரின் செயற்பாட்டை நகர மக்களுடன் சேர்ந்து நானும் வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

எதிர்த்து வாக்களிக்க எமது கட்சியினுள் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து, கட்சிக்கும்,தலைமைக்கும் ,கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும் துரோகம் அளித்து பருத்துத்துறை நகர சபைக்கு வரலாற்று கலங்கத்தை  எற்படுத்த அந்த உறுப்பினர் காத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

தவிசாளர் பதவினை இராஜினமா செய்யும் வரை கட்சிக்கு விசுவாசமாகவும்,நேர்மையாக இருந்தேன் என்று கட்சிக்கு தெரியும்.அப்படி இருந்த போது நகர மக்கள் பற்றியோ,கட்சி தலைமை பற்றியோ சிந்திக்காமல் மாற்றுகட்சியின் வஞ்சக நிலையில் விழுந்து,நன்மைகள் பெற்று,வரவு செலவு திட்டத்தை முதல் தடவையில் தோற்கடித்து,இரணடாவது தடவையையும் தோற்கடிக்க முயற்சி செய்தும் துரோகம் செய்ததுக்கு உகந்தையாக இருந்த இந்த உறுப்பினர் உட்படஅனைவரும் இந்த துரோக செயலுக்கு பதில் சொல்ல வேண்டும்.

நான் கட்சியில் இராஜினமா செய்யப் போவதை அறிவித்து இருந்த போது கட்சி தலைமையகமும்,உள்ளூர் கட்சி ஆதரவாளர்களும் என்னை இராஜினமா செய்ய வேண்டாம் என வற்புறுத்தினார்கள்.அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும் இதனை கூறிய போதும்,அதற்கு சம்மந்தம் தெரிவிக்காது மறுப்பு தெரிவித்து இருந்தார்கள்.

இப்பொழுதும் எனது இராஜினாமை விரும்பவில்லை.இறுதியாக மக்களின் நலனை முன்னெடுக்காது கீழ்நிலை செல்லும் இத்தகைய நபர்களை தேர்தலில் முன்நிறுத்துவதை இனி மேலாவது தவிர்க்க வெண்டும் என  எமது கட்சியை மட்டுமல்ல  அனைத்து கட்சியினரையும் கேட்டக் கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பருத்தித்துறை நகரசபை பாதீடு தொடர்பில் மனம் திறந்த முன்னாள் தவிசாளர் 15 உறுப்பினர்களை கொண்ட பருத்துத்துறை நகர சபையில் ஜந்து உறுப்பினர்களில் நான் உட்பட எங்கள் கட்சி அணியை தலைமை தாங்கி சபையை பொறுப்பெடுத்து எண்ணிக்கை பலம் குறைந்த குழுவாக இருந்தும்,பெரும் சிரமங்கள்,சவால்களை கடந்து முன்னெடுத்துள்ளதாக பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் யோசெப் இருதயராஜா தெரிவித்தார்.இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,15 உறுப்பினர்களை கொண்ட பருத்துத்துறை நகர சபையில் ஜந்து உறுப்பினர்களில் நான் உட்பட எங்கள் கட்சி அணியை தலைமை தாங்கி சபையை பொறுப்பெடுத்து எண்ணிக்கை பலம் குறைந்த குழுவாக இருந்தும்,பெரும் சிரமங்கள்,சவால்களை கடந்து முன்னெடுத்துள்ளது. இதற்கு எனது கட்சி அங்கத்தவர்கள் மட்டும் காரணமன்றி சில மாற்று கட்சி மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்களின் ஆதரவு முக்கியமாக நான் குறிப்பிடாது அறிந்து கொள்வீர்கள்.இவர்களது ஒத்துழைப்புக்கு எனது நேர்மையானதும்,அனைவரையும் அணைத்து நகர அபிவிருத்தியில் அக்கறையுடன் செயற்பட்டமையே காரணமாகும்.இந்த நகர சபை கலைக்கப்படுவதற்கு இன்னம் சிறிது காலமே இருக்கின்றது.உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு புதிய தேர்தல் விரைவில் வர உள்ளது.அதை குறி வைத்து 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தோல்வியடையச் செய்து தமக்கான விளம்பரத்தை சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் முன்னெடுத்தது மலிவான அரசியல் செய்ய முனைகின்றனர்.சமர்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் நகர அபிவிருத்திக்கான சிறப்பான அம்சங்களை கொண்டிருப்பதற்கான பலரும் கருத்து தெரிவித்து இருக்கும் நிலையில்,தனது சுயநலம் காரணமாக எதிர்த்த ஒரே ஒரு கட்சி உறுப்பினரின் செயற்பாட்டை நகர மக்களுடன் சேர்ந்து நானும் வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.எதிர்த்து வாக்களிக்க எமது கட்சியினுள் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து, கட்சிக்கும்,தலைமைக்கும் ,கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கும் துரோகம் அளித்து பருத்துத்துறை நகர சபைக்கு வரலாற்று கலங்கத்தை  எற்படுத்த அந்த உறுப்பினர் காத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.தவிசாளர் பதவினை இராஜினமா செய்யும் வரை கட்சிக்கு விசுவாசமாகவும்,நேர்மையாக இருந்தேன் என்று கட்சிக்கு தெரியும்.அப்படி இருந்த போது நகர மக்கள் பற்றியோ,கட்சி தலைமை பற்றியோ சிந்திக்காமல் மாற்றுகட்சியின் வஞ்சக நிலையில் விழுந்து,நன்மைகள் பெற்று,வரவு செலவு திட்டத்தை முதல் தடவையில் தோற்கடித்து,இரணடாவது தடவையையும் தோற்கடிக்க முயற்சி செய்தும் துரோகம் செய்ததுக்கு உகந்தையாக இருந்த இந்த உறுப்பினர் உட்படஅனைவரும் இந்த துரோக செயலுக்கு பதில் சொல்ல வேண்டும்.நான் கட்சியில் இராஜினமா செய்யப் போவதை அறிவித்து இருந்த போது கட்சி தலைமையகமும்,உள்ளூர் கட்சி ஆதரவாளர்களும் என்னை இராஜினமா செய்ய வேண்டாம் என வற்புறுத்தினார்கள்.அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதும் இதனை கூறிய போதும்,அதற்கு சம்மந்தம் தெரிவிக்காது மறுப்பு தெரிவித்து இருந்தார்கள்.இப்பொழுதும் எனது இராஜினாமை விரும்பவில்லை.இறுதியாக மக்களின் நலனை முன்னெடுக்காது கீழ்நிலை செல்லும் இத்தகைய நபர்களை தேர்தலில் முன்நிறுத்துவதை இனி மேலாவது தவிர்க்க வெண்டும் என  எமது கட்சியை மட்டுமல்ல  அனைத்து கட்சியினரையும் கேட்டக் கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement