• May 18 2024

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத நிலை பேராசிரியர் கனகசிங்கம்!

Tamil nila / Dec 21st 2022, 10:10 pm
image

Advertisement

உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் வருடாந்தம் பெருமளவான மாணவர்கள் பல்கலைக்கழக கற்றல் வாய்ப்பினை இழப்பதாக என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.


இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208வது ஆண்டினை குறிக்கும் வகையிலான ‘மத்திய தீபம்’ நூல் வெளியீடு இன்று நடைபெற்றது.




பாடசாலையின் ஹாட்மன் அரங்கில் பாடசாலை அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் பாடசாலையின் பழைய மாணவருமான பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபர்களான அருளானந்தராஜா,கமல்ராஜ்,பி.விமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அமெரிக்க மிசனரிகளினால் 1814ஆம் ஆண்டு இலங்கையில் முதல் பாடசாலையாக கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பல்வேறு சாதனைக்கொண்டதாகயிருந்துவருகின்றது.




இப்பாடசாலையின் 208ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ‘மத்திய தீபம்’ நூல் இதன்போது அதிதிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்டது

.

இதன்போது ‘மத்திய தீபம்’ நூல் தொடர்பான நூல் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான வல்லிபுரம் கனகசிங்கம் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.


இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,


பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் சார்பில் அந்த விண்ணப்பங்களை நிரப்பும் ஆசிரியர்கள்,மாணவர் சார்பில் நிரப்புபவர்கள் அந்த விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்திசெய்யாததன் காரணமாக பெரு{ம்பாலான மாணவர்களின் விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் நிலைமையுள்ளது.


இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நிரப்பும்போது முறையாக பூர்த்திசெய்யவேண்டும்.


13வருடங்களாக மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பப்படிவத்தை நிரம்பும் அந்த ஒரு மணி நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் வாய்ப்பு இல்லாமல்போகின்றது.


இது தொடர்பில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சிபட்டறைகளை முன்னெடுக்கவேண்டும்.ஒவ்வொரு துறையிலும் பெருமளவான பகுதிகள் காணப்படுகின்றன.மாணவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்திசெய்யும்போது பல்கலைக்கழகத்தினையும் கற்கும் கற்கை நெறிகளையும் தெரிவுசெய்யும்போது பல்வேறுபட்டவாய்ப்புகளை இழக்கின்றனர்.


அதேபோன்று தமக்கு விரும்பமான பல்கலைக்கழகத்திற்கு சென்று கற்கைகளை மேற்கொண்டு ஓரிரு வருடங்களில் அந்த பல்கலைக்கழகத்தில் தமது கற்கை நெறியினை பூர்த்திசெய்யமுடியாமல் இடமாற்றம் செய்து தமது கற்கை நெறிகளை இழந்தவர்கள் ஏராளமானவர்கள்.


எனவே பாடசாலையின் அபிவிருத்திக்குழு,பழைய மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை செய்யவேண்டும்.


அவ்வாறு பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்களுக்கு இன்று பல்வேறுபட்ட வாய்ப்புகள் காணப்படுகின்றது.இலங்கையினை பொறுத்த வரையில் உயர்கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்பட்டாலும் புலமைப்பரிசில் திட்டங்கள் ஊடாக கற்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்லும் வழிமுறைகள் காணப்படுகின்றது.


இந்திய தூதுவரை அண்மையில் சந்தித்தபோது 600க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்கள் இந்தியாவில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதாக கூறியிருந்தார்.நாங்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில்லை.இந்தியாபோன்று பல நாடுகள் வழங்குகின்றன.


ஒரு குறிப்பிட்ட பகுதியினரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் நிலையில் மிகுதியாகவுள்ள மாணவர்களை வழிநடாத்தவேண்டிய தேவையுள்ளது.எதிர்காலத்தில் கலைத்துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.


தொழிலற்ற பட்டதாரிகளில் அதிகமானவர்கள் கலைத்துறையினை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அது சார்ந்த கற்கை நெறிகளுக்கான வாய்ப்பினை குறைப்பதன் ஊடாக ஏனைய கற்கை நெறிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.

இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை வழிப்படுத்தவேண்டிய தேவை பாடசாலைகளுக்கு உள்ளது என்றார். 

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத நிலை பேராசிரியர் கனகசிங்கம் உயர்தரம் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்கள் முறையான வகையில் பூர்த்திசெய்யப்படாத காரணத்தினால் வருடாந்தம் பெருமளவான மாணவர்கள் பல்கலைக்கழக கற்றல் வாய்ப்பினை இழப்பதாக என கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 208வது ஆண்டினை குறிக்கும் வகையிலான ‘மத்திய தீபம்’ நூல் வெளியீடு இன்று நடைபெற்றது.பாடசாலையின் ஹாட்மன் அரங்கில் பாடசாலை அதிபர் இ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் பாடசாலையின் பழைய மாணவருமான பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபர்களான அருளானந்தராஜா,கமல்ராஜ்,பி.விமல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.அமெரிக்க மிசனரிகளினால் 1814ஆம் ஆண்டு இலங்கையில் முதல் பாடசாலையாக கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பல்வேறு சாதனைக்கொண்டதாகயிருந்துவருகின்றது.இப்பாடசாலையின் 208ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ‘மத்திய தீபம்’ நூல் இதன்போது அதிதிகளினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.இதன்போது ‘மத்திய தீபம்’ நூல் தொடர்பான நூல் நயவுரையினை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் நிகழ்த்தினார்.இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான வல்லிபுரம் கனகசிங்கம் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டனர்.இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் சார்பில் அந்த விண்ணப்பங்களை நிரப்பும் ஆசிரியர்கள்,மாணவர் சார்பில் நிரப்புபவர்கள் அந்த விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்திசெய்யாததன் காரணமாக பெரு{ம்பாலான மாணவர்களின் விண்ணப்பப்படிவம் நிராகரிக்கப்படும் நிலைமையுள்ளது.இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை நிரப்பும்போது முறையாக பூர்த்திசெய்யவேண்டும்.13வருடங்களாக மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கான விண்ணப்பப்படிவத்தை நிரம்பும் அந்த ஒரு மணி நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் வாய்ப்பு இல்லாமல்போகின்றது.இது தொடர்பில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பயிற்சிபட்டறைகளை முன்னெடுக்கவேண்டும்.ஒவ்வொரு துறையிலும் பெருமளவான பகுதிகள் காணப்படுகின்றன.மாணவர்கள் விண்ணப்படிவத்தினை பூர்த்திசெய்யும்போது பல்கலைக்கழகத்தினையும் கற்கும் கற்கை நெறிகளையும் தெரிவுசெய்யும்போது பல்வேறுபட்டவாய்ப்புகளை இழக்கின்றனர்.அதேபோன்று தமக்கு விரும்பமான பல்கலைக்கழகத்திற்கு சென்று கற்கைகளை மேற்கொண்டு ஓரிரு வருடங்களில் அந்த பல்கலைக்கழகத்தில் தமது கற்கை நெறியினை பூர்த்திசெய்யமுடியாமல் இடமாற்றம் செய்து தமது கற்கை நெறிகளை இழந்தவர்கள் ஏராளமானவர்கள்.எனவே பாடசாலையின் அபிவிருத்திக்குழு,பழைய மாணவர்கள் இணைந்து பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களை செய்யவேண்டும்.அவ்வாறு பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்களுக்கு இன்று பல்வேறுபட்ட வாய்ப்புகள் காணப்படுகின்றது.இலங்கையினை பொறுத்த வரையில் உயர்கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்பட்டாலும் புலமைப்பரிசில் திட்டங்கள் ஊடாக கற்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்லும் வழிமுறைகள் காணப்படுகின்றது.இந்திய தூதுவரை அண்மையில் சந்தித்தபோது 600க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்கள் இந்தியாவில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதாக கூறியிருந்தார்.நாங்கள் அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில்லை.இந்தியாபோன்று பல நாடுகள் வழங்குகின்றன.ஒரு குறிப்பிட்ட பகுதியினரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்படும் நிலையில் மிகுதியாகவுள்ள மாணவர்களை வழிநடாத்தவேண்டிய தேவையுள்ளது.எதிர்காலத்தில் கலைத்துறை சார்ந்த கற்கை நெறிகளுக்கான வாய்ப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.தொழிலற்ற பட்டதாரிகளில் அதிகமானவர்கள் கலைத்துறையினை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால் அது சார்ந்த கற்கை நெறிகளுக்கான வாய்ப்பினை குறைப்பதன் ஊடாக ஏனைய கற்கை நெறிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.இவ்வாறான மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை வழிப்படுத்தவேண்டிய தேவை பாடசாலைகளுக்கு உள்ளது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement