• May 04 2024

தீவிரம் படுத்தப்படும் மலையக பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!!கொட்டக்கலையில் விசேட சோதனை!

crownson / Dec 21st 2022, 10:05 pm
image

Advertisement

மலையக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை போலீசார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றது.

இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா பிரதான போலீஸ் அத்தியட்சர் புத்தி உடுகமசூரியவின் பணிப்புரைக்கு அமைய நுவரெலியா வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியுடனும் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் போதை பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் கொட்டகலை நகர பாடசாலைகளில் குறித்த போதை பொருள் சோதனைகள் இடம்பெற்றது.

கொட்டக்கலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலும் மற்றும் கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இந்த போதை பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

தனித்தனியாக பாடசாலை மாணவர்களது புத்தகப் பைகள் சோதனை செய்யப்பட்டதுடன் உடைகளும் சோதனை செய்யப்பட்டன.

குறித்த பிரதான பாடசாலைகளில் அதிபர்களின் அனுமதியுடன், கொட்டக்கலை  ஐக்கிய வர்த்தக சங்கத்தின் போதை பொருள் ஒழிப்பு பிரிவு குழுவின் பங்குபற்றுதலுடனும் திம்புள்ள பத்தன போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட போலீஸ் குழுவின் மூலம் குறித்த பாடசாலையின் மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் குறித்த சோதனை தொடர்பில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிதாக உடன்பாடு இல்லை என்பது தெரியவருகிறது.

குறித்த சோதனை தொடர்பில் பெற்றோர்களை வினவியபோது!  கொட்டகலை பாடசாலை நிர்வாகத்தினர் ஒழுங்கின்மை காரணமாகவே குறித்த போதைப்பொருள் பாடசாலைக்குள் ஊடுருவ கூடியதாக உள்ளது.

இதற்கு மாணவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை.

உடனடியாக குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுங்கள், மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக குழு அங்கத்தவர்களை புதுப்பியுங்கள் போன்ற குற்றச்சாட்டுகளை பெற்றோர்கள் முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரம் படுத்தப்படும் மலையக பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகொட்டக்கலையில் விசேட சோதனை மலையக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை போலீசார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றது. இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதான போலீஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரியவின் பணிப்புரைக்கு அமைய நுவரெலியா வலய கல்வி பணிப்பாளரின் அனுமதியுடனும் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் போதை பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்றைய தினம் கொட்டகலை நகர பாடசாலைகளில் குறித்த போதை பொருள் சோதனைகள் இடம்பெற்றது.கொட்டக்கலை கேம்பிரிட்ஜ் கல்லூரியிலும் மற்றும் கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இந்த போதை பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. தனித்தனியாக பாடசாலை மாணவர்களது புத்தகப் பைகள் சோதனை செய்யப்பட்டதுடன் உடைகளும் சோதனை செய்யப்பட்டன. குறித்த பிரதான பாடசாலைகளில் அதிபர்களின் அனுமதியுடன், கொட்டக்கலை  ஐக்கிய வர்த்தக சங்கத்தின் போதை பொருள் ஒழிப்பு பிரிவு குழுவின் பங்குபற்றுதலுடனும் திம்புள்ள பத்தன போலீஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட போலீஸ் குழுவின் மூலம் குறித்த பாடசாலையின் மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குறித்த சோதனை தொடர்பில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெரிதாக உடன்பாடு இல்லை என்பது தெரியவருகிறது. குறித்த சோதனை தொடர்பில் பெற்றோர்களை வினவியபோது  கொட்டகலை பாடசாலை நிர்வாகத்தினர் ஒழுங்கின்மை காரணமாகவே குறித்த போதைப்பொருள் பாடசாலைக்குள் ஊடுருவ கூடியதாக உள்ளது. இதற்கு மாணவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. உடனடியாக குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்யுங்கள், மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக குழு அங்கத்தவர்களை புதுப்பியுங்கள் போன்ற குற்றச்சாட்டுகளை பெற்றோர்கள் முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement