• Apr 30 2024

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஷ்வரனுக்கு காரைநகரில் சிலை வைக்க வேண்டும்...! பேரின்பநாயகம் வேண்டுகோள்...!samugammedia

Sharmi / Sep 25th 2023, 4:03 pm
image

Advertisement

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு காரைநகரில் சிலை அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் ஆலோசகரும் தந்தை செல்வா அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினருமான இராசையா பேரின்பநாயகம் தெரிவித்தார்.

காரைதீவு எனும் பெயர், காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு 100 வருடங்கள் நிறைவையொட்டி காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம் காரைநகரில் (24) சிறப்பாக இடம் பெற்றிருந்த நிலையில் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகர் மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் ஒரு செயல் வீரன். அவர் காரைநகர் மண்ணுக்கு  மாத்திரமல்ல இலங்கை முழுவதற்கும் பல நல்லவிடயங்களை செய்துள்ளார். குறிப்பாக இந்து கலாச்சாராக அமைச்சராக இருந்த காலத்தில் இரண்டாவது உலக இந்து மாநாட்டினை இலங்கையில் அதாவது கொழும்பில் நடாத்தி இருந்தார்.

அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்தி காரைநகர் மற்றும் செல்வச் சந்நிதி ஆலயங்களில் புதிய மண்டபங்களை கட்டி திறந்து வைத்தார்.

அதேபோல காரைநகரில் எந்த ஒரு இடத்திலும் இல்லாதவாறு அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவின் ஒத்துழைப்படுன் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தினை உருவாக்கி இருந்தார்,

அதன்பின்னர் வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு பிரதேச சபையோ பிரதேச செயலகமா புதியதாக உருவாக்கப்படவில்லை.

அது மகேஷ்வரனின் முயற்சியின் பயனாக அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது அதேபோல மகேஸ்வரனால் இலங்கை முழுவதும் சேவை ஆற்றப்பட்டுள்ளது.

காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட தியாகராஜா மகேஸ்வரனுக்கு காரைநகரில் பொருத்தமான இடத்தில் ஒரு சிலையொன்று வைக்கப்பட வேண்டும் அதேபோல் காரைநகர் மக்கள் மகேஸ்வரனை மறக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்

முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஷ்வரனுக்கு காரைநகரில் சிலை வைக்க வேண்டும். பேரின்பநாயகம் வேண்டுகோள்.samugammedia முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் அமரர் தியாகராஜா மகேஸ்வரனுக்கு காரைநகரில் சிலை அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் ஆலோசகரும் தந்தை செல்வா அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினருமான இராசையா பேரின்பநாயகம் தெரிவித்தார்.காரைதீவு எனும் பெயர், காரைநகர் என பெயர் மாற்றப்பட்டு 100 வருடங்கள் நிறைவையொட்டி காரைநகர் அபிவிருத்தி சபையினரின் ஏற்பாட்டில் நூற்றாண்டு விழா நிகழ்வு நேற்றையதினம் காரைநகரில் (24) சிறப்பாக இடம் பெற்றிருந்த நிலையில் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,காரைநகர் மண்ணின் மைந்தன் அமரர் தியாகராஜா மகேஸ்வரன் ஒரு செயல் வீரன். அவர் காரைநகர் மண்ணுக்கு  மாத்திரமல்ல இலங்கை முழுவதற்கும் பல நல்லவிடயங்களை செய்துள்ளார். குறிப்பாக இந்து கலாச்சாராக அமைச்சராக இருந்த காலத்தில் இரண்டாவது உலக இந்து மாநாட்டினை இலங்கையில் அதாவது கொழும்பில் நடாத்தி இருந்தார்.அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்தி காரைநகர் மற்றும் செல்வச் சந்நிதி ஆலயங்களில் புதிய மண்டபங்களை கட்டி திறந்து வைத்தார்.அதேபோல காரைநகரில் எந்த ஒரு இடத்திலும் இல்லாதவாறு அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவின் ஒத்துழைப்படுன் பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகத்தினை உருவாக்கி இருந்தார்,அதன்பின்னர் வடக்கு மாகாணத்தில் எந்த ஒரு பிரதேச சபையோ பிரதேச செயலகமா புதியதாக உருவாக்கப்படவில்லை.அது மகேஷ்வரனின் முயற்சியின் பயனாக அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது அதேபோல மகேஸ்வரனால் இலங்கை முழுவதும் சேவை ஆற்றப்பட்டுள்ளது.காரைநகரை பிறப்பிடமாகக் கொண்ட தியாகராஜா மகேஸ்வரனுக்கு காரைநகரில் பொருத்தமான இடத்தில் ஒரு சிலையொன்று வைக்கப்பட வேண்டும் அதேபோல் காரைநகர் மக்கள் மகேஸ்வரனை மறக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement