• May 18 2024

பரீட்சை மதிப்பீடுகள் – கடமைக் கொடுப்பனவுகள் 60 வீதத்தால் அதிகரிப்பு?

Chithra / Dec 17th 2022, 12:22 pm
image

Advertisement

உயர்தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைக் கொடுப்பனவுகளை அறுபது வீதத்தால் அதிகரிப்பதற்கான முன்மொழிவை பரீட்சைகள் திணைக்களம் கல்வி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.

தற்போதைய நெருக்கடியான பொருளாதாரச் சூழலின் அடிப்படையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பிரேரணை தற்போது சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சும் ஆணைக்குழுவும் தனியான குழுக்களை நியமித்துள்ளன.

பரீட்சைக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான கோரிக்கை சில காலங்களுக்கு முன்னர் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களால் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படாததுடன், கல்வி உதவித்தொகை அதிகரிப்பின்மையால் பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொள்ளும் போக்கு காணப்படுவதனால் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.

அதன்படி, அடுத்த ஆண்டு முதல், அறுபது சதவீதம் இல்லாவிட்டாலும், உதவித்தொகை ஓரளவு உயர்த்தப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சை மதிப்பீடுகள் – கடமைக் கொடுப்பனவுகள் 60 வீதத்தால் அதிகரிப்பு உயர்தரம், சாதாரண தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைக் கொடுப்பனவுகளை அறுபது வீதத்தால் அதிகரிப்பதற்கான முன்மொழிவை பரீட்சைகள் திணைக்களம் கல்வி அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளது.தற்போதைய நெருக்கடியான பொருளாதாரச் சூழலின் அடிப்படையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பிரேரணை தற்போது சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைச்சும் ஆணைக்குழுவும் தனியான குழுக்களை நியமித்துள்ளன.பரீட்சைக் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான கோரிக்கை சில காலங்களுக்கு முன்னர் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்களால் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படாததுடன், கல்வி உதவித்தொகை அதிகரிப்பின்மையால் பரீட்சை மதிப்பீடுகள் மற்றும் கடமைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கவனம் செலுத்துவதை குறைத்துக்கொள்ளும் போக்கு காணப்படுவதனால் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.அதன்படி, அடுத்த ஆண்டு முதல், அறுபது சதவீதம் இல்லாவிட்டாலும், உதவித்தொகை ஓரளவு உயர்த்தப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement