• Jun 02 2024

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்- சபையில் கேள்வியெழுப்பிய சஜித்!

Sharmi / Dec 1st 2022, 8:50 am
image

Advertisement

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் தொடர்பாக மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையின் கடல் எல்லையில் கடந்த மே 2021 ஆண்டில்  எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக தீப்பற்றி எரிந்தமையால் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, நாட்டின் மேற்கு கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட மொத்த சேதத்திற்கு காப்புறுதி நிறுவனங்கள் ஓரளவு இழப்பீடு வழங்கியிருந்தாலும், இதுவரையில் பெறப்பட்ட இழப்பீடு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தவறியுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றையதினம் (30) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்- சபையில் கேள்வியெழுப்பிய சஜித் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் தொடர்பாக மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.இலங்கையின் கடல் எல்லையில் கடந்த மே 2021 ஆண்டில்  எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக தீப்பற்றி எரிந்தமையால் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பிற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.இதன் விளைவாக, நாட்டின் மேற்கு கடலோர பகுதியில் மீன்பிடித் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.இதனால் ஏற்பட்ட மொத்த சேதத்திற்கு காப்புறுதி நிறுவனங்கள் ஓரளவு இழப்பீடு வழங்கியிருந்தாலும், இதுவரையில் பெறப்பட்ட இழப்பீடு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தவறியுள்ளது.இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்றையதினம் (30) நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement