முகநூல் காதல்: நேற்றிரவு தமிழ் சிறுமி எடுத்த விபரீத முடிவால் பதறிப்போன அக்கம்பக்கத்தினர்!

218

சமூக வலைத்தளமான முகநூல் மூலம் காதல் செய்து நபரொருவர் ஏமாற்றியதால், மன உளைச்சலில் இருந்த 17 வயது சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஜான் கென்னடி மற்றும் எலிசபெத் தம்பதியினர். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் (கிரேசி) என்ற 17 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கிரேசி கடந்த 6 மாதங்களாகவே அரக்கோணத்தை சேர்ந்த புழல் சிறையில் காவல் கண்காணிப்பாளருக்கு துப்பாக்கி பாதுகாப்பு பணியில் இருக்கும் மகேஷ் என்ற நபரோடு முகநூல் மூலமாக பழக்கமாகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது கிரேசியின் பெற்றோர்களுக்கு தெரிந்து தட்டி கேட்டதாகவும், மேலும் கிரேசியின் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் 6 மாதமாக காதலித்து விட்டு தற்பொழுது திருமணம் செய்ய மகேஷ் மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிரேசி, நேற்று மாலை அவரது அம்மாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் கிரேசி தனது அறையில் மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தாரின் உதவியுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.