இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
10,000 வீடுகள் கட்டும் இந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் சார்பு இருப்பதாக முன்னர் செய்திகள் வந்தாலும், இம்முறை, குறித்த திட்டம் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் அரசியல் சார்பு இல்லாமலும் நடத்தப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்ட வீட்டுவசதி அபிவிருத்தி மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூ. 1.3 பில்லியன் உள்நாட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயனடையப்போகும் குடும்பங்கள்: இந்த ஆண்டு கிடைக்கவிருக்கும் புதிய வீடுகள் இந்திய உதவித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 4,700 பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.10,000 வீடுகள் கட்டும் இந்திய திட்டத்தின் ஒரு பகுதியாக பெருந்தோட்டத்துறை வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு, பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் சார்பு இருப்பதாக முன்னர் செய்திகள் வந்தாலும், இம்முறை, குறித்த திட்டம் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் அரசியல் சார்பு இல்லாமலும் நடத்தப்படும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.இதன்படி, நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.இதேவேளை, பெருந்தோட்ட வீட்டுவசதி அபிவிருத்தி மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ரூ. 1.3 பில்லியன் உள்நாட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.