• May 03 2024

மட்டக்களப்பில் 4 ஆவது நாளாக தொடரும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம்! samugammedia

Tamil nila / Sep 17th 2023, 11:09 am
image

Advertisement

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று  3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டமாக கருதப்படுகிறது.



மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு,பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இவ் அறவழிப் போராட்டத்தினை மயிலத்தமடு,பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கமல அமைப்புக்களால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கி சூடு நடாத்தி கொல்லப்படுவதுட்,இறைச்சிக்காக வெட்டப்படுவதும் களவாடப்படுவதும் நிலை காணப்படுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் அப் பிரதேசத்திற்கு வருகை தந்து அத்துமீறிய குடியேற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் தங்களது பயிர் செய்கை நடவடிக்கைக்காக கால் நடை உணவாக உட்கொள்ளும் புற்களை உழவடித்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செல்வராஜா கஜேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ப.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் மாகான சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,முன்னாள் மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான சிவலோகநாதன்,கு.வி.லவக்குமார் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பவானந்தனும் கலந்து கொண்டனர்.



மட்டக்களப்பில் 4 ஆவது நாளாக தொடரும் பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் samugammedia மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேச கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று  3ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும்,கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டமாக கருதப்படுகிறது.மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு,பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இவ் அறவழிப் போராட்டத்தினை மயிலத்தமடு,பெரியமாதவனை கால்நடை வளர்ப்போர் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு கமல அமைப்புக்களால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியான முறையில் கால்நடைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் துப்பாக்கி சூடு நடாத்தி கொல்லப்படுவதுட்,இறைச்சிக்காக வெட்டப்படுவதும் களவாடப்படுவதும் நிலை காணப்படுவதுடன் பண்ணையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.பொலநறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தோர் அப் பிரதேசத்திற்கு வருகை தந்து அத்துமீறிய குடியேற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் தங்களது பயிர் செய்கை நடவடிக்கைக்காக கால் நடை உணவாக உட்கொள்ளும் புற்களை உழவடித்து அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரை அழிவடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், செல்வராஜா கஜேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ப.அரியநேத்திரன்,ஞா.சிறிநேசன்,முன்னாள் மாகான சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்,முன்னாள் மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான சிவலோகநாதன்,கு.வி.லவக்குமார் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பவானந்தனும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement