• May 04 2024

கனடாவில் இடம்பெற்ற “ஊட்டும் கரங்கள்” இன்னிசை மாலை நிகழ்வு! samugammedia

Tamil nila / Oct 29th 2023, 2:20 pm
image

Advertisement

முல்லைத்தீவு புனிதபூமி அன்பு இல்லம்  குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காகவும், கல்வி மேம்பட்டிக்காகவும் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் 12 ஆவது ஆண்டாக நடாத்தும் “ஊட்டும் கரங்கள்” இன்னிசை மாலை நிகழ்வு நேற்று (28) கனடாவில் இடம்பெற்றது. 


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் உரை மற்றும் இன்னிசை நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் முக்கிய அங்கமாக கனடாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீக சமூக பணியாற்றி வருபவரும் பல இளைஞர்களை சமூகத்தில் நற்பிரைஜைகளாக வாழவைக்க உதவிய கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய குரு சுவாமி அருள்திரு சுப்ரமணியம் நாகலிங்கம்  மற்றும் கனடா மண்ணில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணி, ஊர்ப்பணி, சமூகப்பணி ஆற்றிவரும்  சோமசச்சிதானந்தம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன்  இசைக் கலைஞர்கள் ஏற்ப்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பட்டனர். 




கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவு இல்லத்துக்கு பிரத்தியேக  வகுப்பறைகள், பிரார்த்தனை மண்டபம், பொது நிகழ்வு மண்டபம் உள்ளடங்கிய  பிரமாண்டமான மண்டபத்தினை   சுமார் 36 இலட்சம் ரூபா நிதியில்    கனடா - இலங்கை முன்னாள் வர்த்தகர் சங்கம் அமைத்துக்கொடுத்துள்ளது . அதற்கான சான்றிதழை ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் பரமேஸ்வரன் முன்னிலையில் கனடா - இலங்கை முன்னாள் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் வழங்கிவைத்தனர்.



கனடாவில் இடம்பெற்ற “ஊட்டும் கரங்கள்” இன்னிசை மாலை நிகழ்வு samugammedia முல்லைத்தீவு புனிதபூமி அன்பு இல்லம்  குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காகவும், கல்வி மேம்பட்டிக்காகவும் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் 12 ஆவது ஆண்டாக நடாத்தும் “ஊட்டும் கரங்கள்” இன்னிசை மாலை நிகழ்வு நேற்று (28) கனடாவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் உரை மற்றும் இன்னிசை நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வின் முக்கிய அங்கமாக கனடாவில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீக சமூக பணியாற்றி வருபவரும் பல இளைஞர்களை சமூகத்தில் நற்பிரைஜைகளாக வாழவைக்க உதவிய கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய குரு சுவாமி அருள்திரு சுப்ரமணியம் நாகலிங்கம்  மற்றும் கனடா மண்ணில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணி, ஊர்ப்பணி, சமூகப்பணி ஆற்றிவரும்  சோமசச்சிதானந்தம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன்  இசைக் கலைஞர்கள் ஏற்ப்பாட்டாளர்களால் கௌரவிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அறிவு இல்லத்துக்கு பிரத்தியேக  வகுப்பறைகள், பிரார்த்தனை மண்டபம், பொது நிகழ்வு மண்டபம் உள்ளடங்கிய  பிரமாண்டமான மண்டபத்தினை   சுமார் 36 இலட்சம் ரூபா நிதியில்    கனடா - இலங்கை முன்னாள் வர்த்தகர் சங்கம் அமைத்துக்கொடுத்துள்ளது . அதற்கான சான்றிதழை ஈழநாடு பத்திரிகை ஆசிரியர் பரமேஸ்வரன் முன்னிலையில் கனடா - இலங்கை முன்னாள் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் வழங்கிவைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement