நாட்டின் வளர்ச்சிக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரூ ஃப்ரான்ஸுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போதே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரூ ஃப்ரான்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் நிலையான சமாதானத்தை மேம்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்தின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மற்றும் தொழில் நுட்ப உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் - ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரூ ஃப்ரான்ஸுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போதே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரூ ஃப்ரான்ஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாட்டில் நிலையான சமாதானத்தை மேம்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்தின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.