நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் முதல் குறித்த விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 7 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதவிர திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 15 பேரும் அவ்வாறான குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் முதல் நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்படும் - பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு நிதி மோசடி குற்றவியல் விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த வாரம் முதல் குறித்த விசாரணை பிரிவு மீண்டும் ஸ்தாபிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடி சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்த 7 பேரும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதவிர திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 15 பேரும் அவ்வாறான குற்றச் செயல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.