• Jan 25 2025

பொலிஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து

Chithra / Dec 31st 2024, 3:31 pm
image

 

வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்து இன்று (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் போது,  குறித்த அறையிலிருந்த புத்தகங்கள் மற்றும் பழைய ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, பொலிஸ் நிலையத்தினுள் உள்ள போக்குவரத்து பிரிவு, சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகம் ஆகியவற்றின் அறைகளில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் மற்றும் புத்தகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

பொலிஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து  வெயாங்கொடை பொலிஸ் நிலையத்தில் உள்ள அறை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெயாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (31) பிற்பகல் ஏற்பட்டுள்ளது.தீ விபத்தின் போது,  குறித்த அறையிலிருந்த புத்தகங்கள் மற்றும் பழைய ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, பொலிஸ் நிலையத்தினுள் உள்ள போக்குவரத்து பிரிவு, சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு பணியகம் ஆகியவற்றின் அறைகளில் உள்ள ஜன்னல்கள், கதவுகள் மற்றும் புத்தகங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக  பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement