• Jan 23 2025

துருக்கியில் ஏற்பட்ட தீ விபத்து 66 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Thansita / Jan 21st 2025, 10:40 pm
image

துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து  ஏற்பட்டது.  இவ்விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

தீயில் சிக்கியதால் பயமடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதித்ததால் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 11 மாடிகளைக் கொண்ட கிராண்ட் கார்டால் ஹோட்டலின் உணவகத்தில் தீப்பிடித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலில் சுமார் 234 பேர் தங்கியிருந்ததாக போலு மாகாண ஆளுநர் அப்துல்அஜிஸ் அய்டின் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பயத்தினால்  கட்டிடத்திலிருந்து கீழே குதித்து இறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் சுகாதார அமைச்சர் கெமல் மெமிசோக்லு இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.

குறைந்தது 51 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கீழே குதித்த பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

துருக்கியில் ஏற்பட்ட தீ விபத்து 66 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம் துருக்கியின் போலு மலைப்பகுதியில் உள்ள ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து  ஏற்பட்டது.  இவ்விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தீயில் சிக்கியதால் பயமடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதித்ததால் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். 11 மாடிகளைக் கொண்ட கிராண்ட் கார்டால் ஹோட்டலின் உணவகத்தில் தீப்பிடித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலில் சுமார் 234 பேர் தங்கியிருந்ததாக போலு மாகாண ஆளுநர் அப்துல்அஜிஸ் அய்டின் கூறியுள்ளார்.பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பயத்தினால்  கட்டிடத்திலிருந்து கீழே குதித்து இறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் சுகாதார அமைச்சர் கெமல் மெமிசோக்லு இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.குறைந்தது 51 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கீழே குதித்த பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் சிலர் கடுமையான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement