• May 18 2024

கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு..!சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!samugammedia

Sharmi / Jun 29th 2023, 3:22 pm
image

Advertisement

துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று பகல் திருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே குறித்த குற்ற செயலுக்கு வலுச்சேர்த்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும், தடயப்பொருட்களையும் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு.சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது.samugammedia துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி உதயநகர் பகுதியில் வைத்து காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் கிளிநொச்சி மாவட்ட குற்றபுலனாய்வு பிரிவினர் தேடி வந்தனர்.இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று பகல் திருநகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட உள்ளூர் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இரு தரப்புக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடே குறித்த குற்ற செயலுக்கு வலுச்சேர்த்துள்ளதாக பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களையும், தடயப்பொருட்களையும் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement