பேருவளை பிரதேசத்தில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை வர்த்தகர்கள் குழுவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பலநாள் மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் மீனவரே இவ்வாறு நேற்று (26) கைது செய்யப்பட்டார்.
தனது மீன்பிடி தொழில் குறைந்ததால், சுமார் 04 வருடங்களாக தனக்குச் சொந்தமான இந்த வலம்புரியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட வலம்புரியின் நீளம் 37 சென்றி மீற்றர் மற்றும் கழுத்தின் விட்டம் 40 சென்றி மீற்றர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையின் புலனாய்வு அதிகாரிகளும் உதவியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவரையும், அவர் வசம் உள்ள வலம்புரியையும் இன்று (27) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலம்புரி சங்குடன் வசமாக சிக்கிய மீனவர். பேருவளை பிரதேசத்தில் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை வர்த்தகர்கள் குழுவிற்கு விற்பனை செய்ய முற்பட்ட நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரை கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கைது செய்துள்ளனர்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பலநாள் மீன்பிடி படகுகளை வைத்திருக்கும் மீனவரே இவ்வாறு நேற்று (26) கைது செய்யப்பட்டார்.தனது மீன்பிடி தொழில் குறைந்ததால், சுமார் 04 வருடங்களாக தனக்குச் சொந்தமான இந்த வலம்புரியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.கைப்பற்றப்பட்ட வலம்புரியின் நீளம் 37 சென்றி மீற்றர் மற்றும் கழுத்தின் விட்டம் 40 சென்றி மீற்றர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த கைது நடவடிக்கைக்கு இலங்கை விமானப்படையின் புலனாய்வு அதிகாரிகளும் உதவியுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவரையும், அவர் வசம் உள்ள வலம்புரியையும் இன்று (27) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.