• May 18 2024

கிராஞ்சியில் மேலும் பலருக்கு கடலட்டை பண்ணையை வழங்க வேண்டும் – அமைச்சரை கோரும் கடற்றொழிலாளர் சங்கம் samugammedia

Chithra / Nov 9th 2023, 2:14 pm
image

Advertisement


கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமது தவறை உணர்ந்து கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான பணம் லாபமாக கிடைத்துள்ளது. மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர். 

பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுகிறது. 

எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே சொல்கிறார்- என்றார்.


கிராஞ்சியில் மேலும் பலருக்கு கடலட்டை பண்ணையை வழங்க வேண்டும் – அமைச்சரை கோரும் கடற்றொழிலாளர் சங்கம் samugammedia கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக்கு பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆகவே பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த.மகேந்திரன் கோரிக்கை முன்வைத்தார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த காலங்களில் கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணை வழங்க ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் தமது தவறை உணர்ந்து கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர்.ஆனால் கடலட்டை பண்ணை போட்டவர்களுக்கு இலட்சக்கணக்கான பணம் லாபமாக கிடைத்துள்ளது. மேலும் பலர் கடலட்டை பண்ணைக்கு விண்ணப்பித்துள்ளனர். பாரம்பரிய கடற்றொழில் செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவர்களுக்கும் கடலட்டை பண்ணையை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் வந்து தொழில் செய்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனால் எமது வளங்கள் பாதிக்கப்படுகிறது. எமது பகுதி மீனவர்களும் இந்திய கடற்பகுதிக்குள் சென்று கடற்றொழிலில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இதனையே சொல்கிறார்- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement