மு.க. ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை -பதவி ஏற்பு விழாவில் நெகிழ்ச்சி’… வைரலாகும் காணொளி..!

569

மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் துர்கா ஸ்டாலின் கண் கலங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.பெரும் வைரலாக உள்ளது.

சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப் பெரும்பான்மை பெற்றது.

மேலும் இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார்.

அத்தோடு தன்னை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலையும் அப்போது ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். மேலும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

எனினும் அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினைப் பதவி ஏற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

மேலும் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

எனினும் இதற்கிடையே ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்னும் நான் என ஸ்டாலின் கூறியதும் அங்கிருந்த மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார். இளைஞராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய ஸ்டாலின் இன்று முதல்வராகப் பதவி ஏற்பது அவருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: