மிதக்கும் சந்தை பகுதியை போராட்டகாரர்களுக்கு ஒதுக்கும் அரசாங்கம்!

கொழும்பு மெனிங் மிதக்கும் சந்தை அமைந்துள்ள பகுதியை போராட்டகாரர்களுக்கு ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் போராட்டகாரர்களின் கலைகள் தொடர்பாக நடவடிக்கைகளும் அந்த இடத்தில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

போராட்டகாரர்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

போராட்டகாரர்கள் மற்றும் இளைய தலைமுறையினருடன் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தயார். பொருளாதார போராட்டத்தில் வெற்றி பெறுவதே தற்போதுள்ள சவால்.

இதற்கமைய, இந்த பொருளாதார போராட்டத்தை வெற்றியடைய செய்வதற்காக அனைத்து வகையிலும் இளைஞர், யுவதிகளின் பயங்களிப்பை பெற எதிர்பார்துள்ளேன்.

ஜனநாயகமற்ற அரசியல் மற்றும் வன்முறையை நான் எதிர்க்கின்றேன். அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை நிறுத்தி, சிறந்த சமூக ஜனநாயகத்திற்காக முன்வர வேண்டும்.

பகிடிவதையே தற்போதைய பல்கலைக்கழக கட்டமைப்பு வீழ்ச்சியடைய பிரதான காரணம். பணிப்புறக்கணிப்புகள் சகல காலங்களில் நடந்தாலும் பணிப்புறக்கணிப்புகளால் ஒரு நாடு முன்நோக்கி செல்ல முடியாது.

பேச்சுவார்த்தை மூலம் நடு நிலையான இடத்திற்கு வந்து கோரிக்கைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் நாட்டுக்காக கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து போராட்டகாரர்களும் அங்கம் வகிக்கும் வகையில் பிரதான அணியை உருவாக்கிக்கொள்ளுங்கள். அந்த அணியில் அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும், பெண்களும் அடங்கியிருப்பது அவசியம் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை