• Jul 02 2024

57வருடங்களுக்கு பின் முதல் தடவையாக தாயின் பராமரிப்பில் வாழும் வறிய மாணவன் சாதனை!

Sharmi / Jan 31st 2023, 11:58 am
image

Advertisement

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக கிஷோக்குமார் கிஜோன்சன் எனும் மாணவன் 148 புள்ளிகள் பெற்று  பாடசாலைக்கு பெறருமை சேர்த்துள்ளார்.

 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை வரலாற்றில் 57 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக மாணவன் சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவன் தாயின் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் தனது குடும்ப கஷ்டத்திலும் கல்வி கற்று சாதனை படைத்துள்ளதுடன், குறித்த மாணவனின் குடும்பம் பாரிய கஷ்டத்துடன் தாயின் பராமரிப்பில் பல்வேறு வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

பல்வேறு கஷ்டங்களுடன் தனது கல்வியை கற்று சாதனை படைத்த மாணவனின் கல்வியை தொடர்வதற்கும், குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு உதவி புரியுமாறு பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவனின் அயராது உழைப்பும் குடும்பத்தாரின் கற்றலில் கொண்டுள்ள அக்கறையும். வகுப்பாசிரியரான வி.கங்கேஸ்வரன் அவரோடு ஏனைய அசிரியர்களின் முயற்சியும் அதிபரின் வழிநடத்தலும் பாடசாலைக்கு கிடைத்த வெற்றிச் சாதனையாகும்.

இப் பாடசாலையானது கல்குடா வலயத்தில் கோறளைப்பற்று பிரதேச பாடசாலைகளில் கஷ்ட பிரதேச பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது. 

 தற்போது பாடசாலையில் பௌதீகவளங்கள், கற்றல் கற்பித்தல், ஏனைய இணைப்பாட விடயங்களிலும் பாடசாலை வளர்ச்சி கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டிய மாணவனுக்கும் அவரது பெற்றோருக்கும் ஆசிரியர்களும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

57வருடங்களுக்கு பின் முதல் தடவையாக தாயின் பராமரிப்பில் வாழும் வறிய மாணவன் சாதனை கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கல்மடு விவேகானந்தா வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் ஒருவர் சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.இம்முறை வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் வித்தியாலய வரலாற்றில் முதல்தடவையாக கிஷோக்குமார் கிஜோன்சன் எனும் மாணவன் 148 புள்ளிகள் பெற்று  பாடசாலைக்கு பெறருமை சேர்த்துள்ளார். 1965ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை வரலாற்றில் 57 வருடங்களுக்கு பின் முதல் தடவையாக மாணவன் சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவன் தாயின் பராமரிப்பில் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் தனது குடும்ப கஷ்டத்திலும் கல்வி கற்று சாதனை படைத்துள்ளதுடன், குறித்த மாணவனின் குடும்பம் பாரிய கஷ்டத்துடன் தாயின் பராமரிப்பில் பல்வேறு வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.பல்வேறு கஷ்டங்களுடன் தனது கல்வியை கற்று சாதனை படைத்த மாணவனின் கல்வியை தொடர்வதற்கும், குடும்ப கஷ்டத்தை கருத்தில் கொண்டு உதவி புரியுமாறு பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மாணவனின் அயராது உழைப்பும் குடும்பத்தாரின் கற்றலில் கொண்டுள்ள அக்கறையும். வகுப்பாசிரியரான வி.கங்கேஸ்வரன் அவரோடு ஏனைய அசிரியர்களின் முயற்சியும் அதிபரின் வழிநடத்தலும் பாடசாலைக்கு கிடைத்த வெற்றிச் சாதனையாகும்.இப் பாடசாலையானது கல்குடா வலயத்தில் கோறளைப்பற்று பிரதேச பாடசாலைகளில் கஷ்ட பிரதேச பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது பாடசாலையில் பௌதீகவளங்கள், கற்றல் கற்பித்தல், ஏனைய இணைப்பாட விடயங்களிலும் பாடசாலை வளர்ச்சி கண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.பாடசாலைக்கு வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டிய மாணவனுக்கும் அவரது பெற்றோருக்கும் ஆசிரியர்களும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை பாடசாலை அதிபர் சா.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement