• May 08 2024

இந்தியர் மீது மெர்சலான வெளிநாட்டு அழகி..! காதலியை காண 4 மாதங்கள் சைக்கிள் ஓடியே சுவீடன் சென்ற காதலன்..! samugammedia

Chithra / May 25th 2023, 5:25 pm
image

Advertisement

இந்தியர் ஒருவர் தனது சுவீடன் மனைவியை காண்பதற்காக இரவு பகலாக  சைக்கிளிலேயே பயணம் செய்து  சுவீடனுக்கு சென்ற நிகழ்வு தற்போது  வைரலாகி வருகின்றது. 

சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் என்ற பெண், இந்தியர் ஒருவரின் ஓவியத்தை தனது ஓவிய கல்லூரியின்  கண்காட்சியில் பார்த்து வியந்துள்ளார். 

இதனால், உடனே அவருக்கு ஓவியத்தை வரைந்தவரை பார்க்க வேண்டுமென்ற  ஆவல் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர் கடந்த 1975 ஆம் ஆண்டில்,  அந்த ஓவியத்திற்கு சொந்தக்காரரான பிகே மகாந்தியாவை டெல்லியில் சந்தித்த நிலையில்  இருவரும் பேசி பழகிகியுள்ளனர். நாட்களாக அது காதலாக மாறியுள்ளது.

 

பின்னர் இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளனர். இதனால்,  சார்லோட் தன்னோடு சுவீடனுக்கு வந்து விடுமாறு  மகாநந்தியாவை அழைக்க ஆனால் படிப்பை முடித்து விட்டு வருவதாக கூற சார்லோட் சுவீடனுக்கு சென்றுள்ளார். 

பின்னர் தனது படிப்பை முடித்த மகாநந்தியா ஒரு வருடம் கழித்து சுவீடனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அவரிடம் சுவீடனுக்கு செல்ல போதுமான பணமில்லை, எனவே தன்னிடமிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி என சைக்கிள் ஓட்டியே சென்றுள்ளார்.

போகும் வழியில் அவரது சைக்கிள் பல முறை சேதமடைந்துள்ளது. உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்ட அவருக்கு வழியில் சிலர்  உணவளித்துள்ளனர். 


ஒவ்வொரு நாளும் அவர் 70 கி.மீ சைக்கிளை ஓடியே கடந்துள்ளார். பல மாதங்களுக்கு பின்னர் வழியில் பலர் செய்த உதவியின் மூலமும்,  சிலருக்கு ஓவியம் வரைந்து கொடுத்து கிடைத்த பணத்தின் அவர் இறுதியாக சுவீடனை அடைந்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் சுவீடனில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர்களது காதல் கதை தொடர்பாக ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன் மூலம் வைரலாக பரவி வருவதுடன்,  அனைவரையும் இந்த காதல் கதை கவர்ந்துள்ளது.

இந்தியர் மீது மெர்சலான வெளிநாட்டு அழகி. காதலியை காண 4 மாதங்கள் சைக்கிள் ஓடியே சுவீடன் சென்ற காதலன். samugammedia இந்தியர் ஒருவர் தனது சுவீடன் மனைவியை காண்பதற்காக இரவு பகலாக  சைக்கிளிலேயே பயணம் செய்து  சுவீடனுக்கு சென்ற நிகழ்வு தற்போது  வைரலாகி வருகின்றது. சுவீடனை சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் என்ற பெண், இந்தியர் ஒருவரின் ஓவியத்தை தனது ஓவிய கல்லூரியின்  கண்காட்சியில் பார்த்து வியந்துள்ளார். இதனால், உடனே அவருக்கு ஓவியத்தை வரைந்தவரை பார்க்க வேண்டுமென்ற  ஆவல் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அவர் கடந்த 1975 ஆம் ஆண்டில்,  அந்த ஓவியத்திற்கு சொந்தக்காரரான பிகே மகாந்தியாவை டெல்லியில் சந்தித்த நிலையில்  இருவரும் பேசி பழகிகியுள்ளனர். நாட்களாக அது காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளனர். இதனால்,  சார்லோட் தன்னோடு சுவீடனுக்கு வந்து விடுமாறு  மகாநந்தியாவை அழைக்க ஆனால் படிப்பை முடித்து விட்டு வருவதாக கூற சார்லோட் சுவீடனுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது படிப்பை முடித்த மகாநந்தியா ஒரு வருடம் கழித்து சுவீடனுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.ஆனால் அவரிடம் சுவீடனுக்கு செல்ல போதுமான பணமில்லை, எனவே தன்னிடமிருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், துருக்கி என சைக்கிள் ஓட்டியே சென்றுள்ளார்.போகும் வழியில் அவரது சைக்கிள் பல முறை சேதமடைந்துள்ளது. உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்ட அவருக்கு வழியில் சிலர்  உணவளித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் அவர் 70 கி.மீ சைக்கிளை ஓடியே கடந்துள்ளார். பல மாதங்களுக்கு பின்னர் வழியில் பலர் செய்த உதவியின் மூலமும்,  சிலருக்கு ஓவியம் வரைந்து கொடுத்து கிடைத்த பணத்தின் அவர் இறுதியாக சுவீடனை அடைந்துள்ளார். தற்போது அவர்கள் இருவரும் சுவீடனில் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களது காதல் கதை தொடர்பாக ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதன் மூலம் வைரலாக பரவி வருவதுடன்,  அனைவரையும் இந்த காதல் கதை கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement