• Nov 26 2024

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! அமைச்சரவை அங்கீகாரம்

Chithra / Feb 6th 2024, 8:26 am
image

 

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று முன்வைத்திருந்தார்.

இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும்.

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் டொலரில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே  குறிப்பிட்டார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் அவரது நீண்ட கால முயற்சியின் பலனாக கஞ்சா வளர்ப்பில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.


இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமைச்சரவை அங்கீகாரம்  இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று முன்வைத்திருந்தார்.இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும்.உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும், அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் டொலரில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே  குறிப்பிட்டார்.இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் அவரது நீண்ட கால முயற்சியின் பலனாக கஞ்சா வளர்ப்பில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement