• Nov 24 2024

தேர்தல் களத்திலிருந்து அதிரடியாக விலகிய முன்னாள் அமைச்சர்கள் - வெளியான அறிவிப்புக்கள்

Chithra / Oct 11th 2024, 9:01 am
image

 

கடந்த நாடாளுமன்றில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த பல அமைச்சர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.

முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடப்போவதில்லை என அறிவித்தள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக கடமையாற்றிய கலாநிதி பந்துல குணவர்தனவும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும்,  இந்த வருட பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அத்துடன் கடந்த அரசாங்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய ஷெஹான் சேமசிங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் திரு.நவீன் திஸாநாயக்கவும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றின் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்த திரு.லக்ஷ்மன் கிரியெல்ல இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

எனினும், அவரது மகள் சமிந்திரனி பண்டார கிரியெல்ல இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இவ்வருட பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும, நாலக கொடஹேவா, சமால் ராஜபக்ச, ஜோன் செனவிரட்ன, மாவை சேனாதிராஜா, சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன,  ரணில் விக்ரமசிங்க மற்றும்  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். 

மேலும்  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி  கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

தேர்தல் களத்திலிருந்து அதிரடியாக விலகிய முன்னாள் அமைச்சர்கள் - வெளியான அறிவிப்புக்கள்  கடந்த நாடாளுமன்றில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்த பல அமைச்சர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.முக்கிய அமைச்சர்கள் ஏற்கனவே இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளனர்.தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ போட்டியிடப்போவதில்லை என அறிவித்தள்ளார்.மேலும், கடந்த அரசாங்கத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக கடமையாற்றிய கலாநிதி பந்துல குணவர்தனவும் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும்,  இந்த வருட பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.அத்துடன் கடந்த அரசாங்கத்தில் நிதி இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய ஷெஹான் சேமசிங்கவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.மேலும், சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் திரு.நவீன் திஸாநாயக்கவும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றின் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக இருந்த திரு.லக்ஷ்மன் கிரியெல்ல இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.எனினும், அவரது மகள் சமிந்திரனி பண்டார கிரியெல்ல இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார்.இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இவ்வருட பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும, நாலக கொடஹேவா, சமால் ராஜபக்ச, ஜோன் செனவிரட்ன, மாவை சேனாதிராஜா, சீ.வீ. விக்னேஸ்வரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன,  ரணில் விக்ரமசிங்க மற்றும்  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். மேலும்  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தி  கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement