• Jan 11 2025

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்!

Chithra / Dec 30th 2024, 7:55 am
image

 

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் நேற்று காலமானார்.

ஜார்ஜியாவிலுள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜிம்மி கார்ட்டர் கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.


அத்துடன் இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.

கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் படி மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், அதன் எதிரி நாடான எகிப்துக்கும் இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் கார்டரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.


அமெரிக்க ஜனாதிபதிகள் வரலாற்றில் அதிக வயதுவரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஜிம்மி கார்டர், கடந்த ஒக்டோபர் மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜிம்மி கார்டரின் மரணம் குறித்து அவரது மகன் சிப் கார்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிக்கையில், 

“என் தந்தை எனக்கு மட்டுமல்ல; அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலமானார்  அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100ஆவது வயதில் நேற்று காலமானார்.ஜார்ஜியாவிலுள்ள அவரது இல்லத்தில் அவர் காலமானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஜிம்மி கார்ட்டர் கடந்த 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.அத்துடன் இவர் 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது.கேம்ப் டேவிட் உடன்படிக்கையின் படி மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், அதன் எதிரி நாடான எகிப்துக்கும் இடையே நீடித்த போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் கார்டரின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது.அமெரிக்க ஜனாதிபதிகள் வரலாற்றில் அதிக வயதுவரை வாழ்ந்தவர் என்ற பெருமைக்குரிய ஜிம்மி கார்டர், கடந்த ஒக்டோபர் மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.ஜிம்மி கார்டரின் மரணம் குறித்து அவரது மகன் சிப் கார்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல; அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement