• May 18 2024

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்கள்..!samugammedia

Sharmi / Aug 8th 2023, 10:30 am
image

Advertisement

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட எட்டு தளங்களை இலங்கை ஏற்கனவே கொண்டுள்ளது.

இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ள மத்திய கலாசார நிதியம் மேலும் நான்கு இடங்களை பட்டியலில் முன்மொழிவதற்கு தயாராகி வருகிறது.

கலாசார நிதியத்தின்படி, தெமோதர ஒன்பது ஆர்ச் பாலம், ரிட்டிகல, மனகந்த மற்றும் அரண்கல் மடாலயம் ஆகியவற்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் முன்மொழிவதற்கு தேவையான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க,தளங்கள் சிறந்த உலகளாவிய மதிப்பு மற்றும் குறைந்தபட்சம் பத்து தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும்.




யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்கள்.samugammedia யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இலங்கையில் மேலும் நான்கு இடங்களை இணைப்பதற்கு முன்மொழிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யுனெஸ்கோவின் பட்டியலில் சிகிரியா, ரங்கிரி தம்புள்ளை குகைக் கோயில் மற்றும் அனுராதபுரத்தின் புனித நகரம் உட்பட எட்டு தளங்களை இலங்கை ஏற்கனவே கொண்டுள்ளது.இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை பேணி பாதுகாக்கும் பணியை மேற்கொண்டுள்ள மத்திய கலாசார நிதியம் மேலும் நான்கு இடங்களை பட்டியலில் முன்மொழிவதற்கு தயாராகி வருகிறது.கலாசார நிதியத்தின்படி, தெமோதர ஒன்பது ஆர்ச் பாலம், ரிட்டிகல, மனகந்த மற்றும் அரண்கல் மடாலயம் ஆகியவற்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் முன்மொழிவதற்கு தேவையான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க,தளங்கள் சிறந்த உலகளாவிய மதிப்பு மற்றும் குறைந்தபட்சம் பத்து தேர்வு அளவுகோல்களை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும்.

Advertisement

Advertisement

Advertisement