• Oct 30 2024

பிரியமாலி மின்சார கட்டணத்திலும் மோசடி - துண்டிக்கப்பட்ட வீட்டின் மின் இணைப்பு!

Chithra / Dec 3rd 2022, 9:27 am
image

Advertisement

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சார சபையை மேற்கோட்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாமையே இதற்கு காரணம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மின் கட்டண தொகை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் ரூபாய் எனவும் அந்த நாளிதழ் குறிப்பிடுகிறது.

வத்தளை அவெரிவத்தை எட்வர்ட் ஒழுங்கையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரியமாலி மின்சார கட்டணத்திலும் மோசடி - துண்டிக்கப்பட்ட வீட்டின் மின் இணைப்பு பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகோ குழும உரிமையாளர் திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின்சார சபையை மேற்கோட்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாமையே இதற்கு காரணம் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த மின் கட்டண தொகை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் ரூபாய் எனவும் அந்த நாளிதழ் குறிப்பிடுகிறது.வத்தளை அவெரிவத்தை எட்வர்ட் ஒழுங்கையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement