• Oct 06 2024

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள்..! அமைச்சரவை ஒப்புதல்

Chithra / Apr 2nd 2024, 10:59 am
image

Advertisement

 

பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.

இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், வயதுக்கு வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 800,000 மாணவிகளுக்கு ஏப்ரல் 2024 முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள். அமைச்சரவை ஒப்புதல்  பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது.இலங்கையின் மொத்த மாணவர் சனத்தொகை சுமார் நான்கு மில்லியன் எனவும், வயதுக்கு வந்த மாணவிகள் சுமார் 1.2 மில்லியன் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.அந்த மாணவிகளில், மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் படிக்கும் 800,000 மாணவிகளுக்கு ஏப்ரல் 2024 முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement