• Dec 14 2024

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்- வெளியானது அறிவிப்பு!

Tamil nila / Nov 30th 2024, 7:39 pm
image

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. 

 அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2  ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. 

 அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும். 

 அதேநேரம் மண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

 இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் மாற்றம்- வெளியானது அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.  அதன்படி, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2  ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.  அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.  அதேநேரம் மண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 188 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதேவேளை, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 313 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement