• Nov 28 2024

முன்னாள் அமைச்சர்களின் பங்களாக்களில் குவிந்து கிடக்கும் தளபாடங்கள் - அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Chithra / Oct 4th 2024, 9:23 am
image


பல முன்னாள் அமைச்சர்களின் கொழும்பு பங்களாக்களில் பல அரச நிறுவனங்களின் உடமைகள் நிரம்பியுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கி முடியும் வரை, இந்த பங்களாக்களை அரசு ஏற்றுக்கொள்வது தாமதமாகி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக குறித்த பொருட்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் நேற்று  அறிவித்துள்ளது.

அமைச்சர்கள் பலர் பல அரசாங்க நிறுவனங்களை வைத்திருப்பதால், அந்த ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் நாற்காலிகள், மேஜைகள், தொலைக்காட்சிகள் போன்ற தளபாடங்களை அவர்கள் தங்கள் பங்களாக்களுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் நேற்று வரை பத்து பங்களாக்கள் மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் பங்களாக்களில் குவிந்து கிடக்கும் தளபாடங்கள் - அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பல முன்னாள் அமைச்சர்களின் கொழும்பு பங்களாக்களில் பல அரச நிறுவனங்களின் உடமைகள் நிரம்பியுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், நீதித்துறை, மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கி முடியும் வரை, இந்த பங்களாக்களை அரசு ஏற்றுக்கொள்வது தாமதமாகி வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன் காரணமாக குறித்த பொருட்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் நேற்று  அறிவித்துள்ளது.அமைச்சர்கள் பலர் பல அரசாங்க நிறுவனங்களை வைத்திருப்பதால், அந்த ஒவ்வொரு நிறுவனங்களிலிருந்தும் நாற்காலிகள், மேஜைகள், தொலைக்காட்சிகள் போன்ற தளபாடங்களை அவர்கள் தங்கள் பங்களாக்களுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் நேற்று வரை பத்து பங்களாக்கள் மட்டுமே கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement