• May 19 2024

திருமலையில் கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல்..!ஆறு பேருக்கு விளக்கமறியல்...!samugammedia

Sharmi / Sep 18th 2023, 4:16 pm
image

Advertisement

திருகோணமலை சர்தாபுர பகுதியில் திலீபனின் நினைவேந்தல்  ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை -கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் திலீபனின் உருவ சிலையை கொண்டு வரும்போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும்இ 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

திருமலையில் கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல்.ஆறு பேருக்கு விளக்கமறியல்.samugammedia திருகோணமலை சர்தாபுர பகுதியில் திலீபனின் நினைவேந்தல்  ஊர்தி மீது தாக்குதல் நடாத்தியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 14 பேரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் இன்று (18) குறித்த சந்தேகநபர்களை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை -கொழும்பு வீதியினூடாக வாகனம் ஒன்றில் திலீபனின் உருவ சிலையை கொண்டு வரும்போது சர்தாபுர பகுதியில் வைத்து வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் வாகனத்தில் வந்த குறித்த நபர்களை தாக்கியதாகவும் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் இரண்டு பெண்கள் அடங்குவதாகவும்இ 35ற்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களுக்கு ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement