• May 19 2024

யாழில் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் அகற்றப்படாத குப்பைகள்; அதிகாரிகள் உறக்கமா? samugammedia

Chithra / Oct 9th 2023, 10:21 am
image

Advertisement

 


யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் விளையாட்டு திடல் காணியில் அதிகளவு குப்பைகளும் பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்களும் குவிந்து காணப்படுவதுடன் டெங்கு நோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் குறித்த கூடைப்பந்தாட்ட திடலில் இன்று திங்கட்கிழமை(09) இடம்பெற்று வரும் நிலையில் அவற்றில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் வருகைதந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளும் குறித்த குப்பைகளால் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.

டெங்கு ஒழிப்பு, நுளம்பு கட்டுப்பாடு தொடர்பாக செயற்படுவதாக கூறும் சுகாதார பிரிவினரின் செயற்பாடுகள் குறித்த விடயத்தில் முகம் சுழிக்கும் வகையில் காணப்படுகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் என முக்கியமான அரச அலுவலகங்களும் பிரபல பாடசாலைகளும், சிறுவர்கள் கூடும் பழைய பூங்கா என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் மையமாக காணப்படும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் விளையாட்டு திடலின் காணியில் அதிகளவான குப்பைகள் சேர்ந்துள்ளதுடன் அது அகற்றப்படாமல் காணப்படுகிறது.

விளையாட்டு வீரர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பல தரப்பினரும் நாளாந்தம் கூடும் குறித்த பகுதியில் குப்பைகள் அகற்றப்படுகிறதா இல்லையா என்பதை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பதில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மழை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு குப்பை மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் என்பன தேங்கியிருந்தால் அது டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூடைப்பந்தாட்ட திடலில் குப்பைகளை தரம் பிரித்து போடக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் அகற்றப்படாத குப்பைகள்; அதிகாரிகள் உறக்கமா samugammedia  யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் விளையாட்டு திடல் காணியில் அதிகளவு குப்பைகளும் பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்களும் குவிந்து காணப்படுவதுடன் டெங்கு நோய் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது.தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் குறித்த கூடைப்பந்தாட்ட திடலில் இன்று திங்கட்கிழமை(09) இடம்பெற்று வரும் நிலையில் அவற்றில் பங்கேற்பதற்காக நாடளாவிய ரீதியில் வருகைதந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளும் குறித்த குப்பைகளால் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.டெங்கு ஒழிப்பு, நுளம்பு கட்டுப்பாடு தொடர்பாக செயற்படுவதாக கூறும் சுகாதார பிரிவினரின் செயற்பாடுகள் குறித்த விடயத்தில் முகம் சுழிக்கும் வகையில் காணப்படுகிறது.வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் என முக்கியமான அரச அலுவலகங்களும் பிரபல பாடசாலைகளும், சிறுவர்கள் கூடும் பழைய பூங்கா என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதியில் மையமாக காணப்படும் யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் விளையாட்டு திடலின் காணியில் அதிகளவான குப்பைகள் சேர்ந்துள்ளதுடன் அது அகற்றப்படாமல் காணப்படுகிறது.விளையாட்டு வீரர்கள், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் யுவதிகள் என பல தரப்பினரும் நாளாந்தம் கூடும் குறித்த பகுதியில் குப்பைகள் அகற்றப்படுகிறதா இல்லையா என்பதை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணிப்பதில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.மழை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு குப்பை மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன் என்பன தேங்கியிருந்தால் அது டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் கூடைப்பந்தாட்ட திடலில் குப்பைகளை தரம் பிரித்து போடக்கூடிய வாய்ப்புக்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement