• May 06 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார்...! பழனி திகாம்பரம் ஆரூடம்...!samugammedia

Sharmi / Oct 9th 2023, 10:22 am
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் இந்த அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய, புதிய சட்டங்களை கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதற்கு ஆளுந்தரப்பு முற்படுகின்றது. எனவே, அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி உடைவது உறுதி.

நாம் சஜித்தை ஆதரிப்போம். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் என அவர் உறுதியளிப்பார். அடுத்த தேர்தலில் சஜித் வெற்றிபெற்ற பின்னர் இதனை நாம் நிச்சயம் செய்வோம். மக்களே அச்சப்பட வேண்டாம், அடுத்து வருவது எமது ஆட்சியாகவே இருக்கும்.

சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார். சிங்கள வாக்குகள் பலகூறுகளாக பிரியும். எனவே, சிறுபான்மையின மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என திகாம்பரம் தெரிவித்தார்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார். பழனி திகாம்பரம் ஆரூடம்.samugammedia எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் இந்த அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். புதிய, புதிய சட்டங்களை கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதற்கு ஆளுந்தரப்பு முற்படுகின்றது. எனவே, அடுத்த தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி உடைவது உறுதி.நாம் சஜித்தை ஆதரிப்போம். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் என அவர் உறுதியளிப்பார். அடுத்த தேர்தலில் சஜித் வெற்றிபெற்ற பின்னர் இதனை நாம் நிச்சயம் செய்வோம். மக்களே அச்சப்பட வேண்டாம், அடுத்து வருவது எமது ஆட்சியாகவே இருக்கும்.சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரிக்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார். சிங்கள வாக்குகள் பலகூறுகளாக பிரியும். எனவே, சிறுபான்மையின மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கும் சக்தியாக அமையும் என திகாம்பரம் தெரிவித்தார்,

Advertisement

Advertisement

Advertisement