• May 18 2024

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொடுங்கள்..! தௌபீக் எம்.பி கோரிக்கை samugammedia

Chithra / Nov 21st 2023, 12:26 pm
image

Advertisement


யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கோரிக்கை தெரிவித்தார்.

நேற்று (20) வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் சொந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 

யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்களுடைய சொந்த காணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. 

திருகோணமலை மாவட்டத்திலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், பல முயற்சிகள் செய்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை எனவும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இப் பிரச்சினையை தீர்த்துத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணிய, தோப்பூர், செல்வநகர் பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக காணப்படுவதாகவும் இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொடுங்கள். தௌபீக் எம்.பி கோரிக்கை samugammedia யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுடைய காணிகளை மீண்டும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கோரிக்கை தெரிவித்தார்.நேற்று (20) வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் மக்கள் சொந்த காணிகளை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கழிந்தும் அவர்களுடைய சொந்த காணிகள் இதுவரையில் வழங்கப்படவில்லை. திருகோணமலை மாவட்டத்திலும் இப்பிரச்சினை தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், பல முயற்சிகள் செய்தும் இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை எனவும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இப் பிரச்சினையை தீர்த்துத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.மேலும், திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணிய, தோப்பூர், செல்வநகர் பிரதேசங்களின் குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக காணப்படுவதாகவும் இந்த வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குடிநீர் பிரச்சினையை தீர்த்துத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement