• Nov 25 2024

மன்னாரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி...! நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

Sharmi / Feb 19th 2024, 3:32 pm
image

தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (19) மதியம் உத்தரவிட்டார்.

இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள்   உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.



மன்னாரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி. நீதிமன்றம் அதிரடி உத்தரவு. தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (19) மதியம் உத்தரவிட்டார்.இது தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது,தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 16 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த கிராமத்தில் உள்ள தென்னை தோட்டத்தில் வேலை செய்யும் திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தினர்.இந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் (19) பொலிஸாரினால் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.இதன் போது மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள்   உயிரிழந்த சிறுமி சார்பில் மன்றில் முன்னிலையாகினர்.விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement