• May 13 2024

தமிழரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கோட்டா, மஹிந்தவின் வங்கிக் கணக்கில்! - சிறீதரன் எம்.பி. பகிரங்கம் samugammedia

Chithra / Jul 7th 2023, 10:48 am
image

Advertisement

தமிழீழ வைப்பகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், பணம் ஆகியன ராஜபக்ஷக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

உலகத்தின் எந்த நாட்டிலும் நடக்காத விதத்தில் இலங்கை மத்திய வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் செய்தவர்கள் இன்று உயர் பதவிகளில் உள்ளனர். சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கையெடுக்க முடியாத நிலையில், எதற்காக ஊழல் ஒழிப்புச் சட்டம், அதற்கு ஒரு விவாதம்.

இப்படியாக பாராளுமன்றம் காலத்தை இழுத்தடிக்கும் வேலைகளையே செய்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் மோதல் நடந்தபோது, பல தமிழ் மக்கள் தமிழீழ வைப்பகத்தில் நிறைய தங்கத்தை அடகு வைத்திருந்தார்கள். நிறைய பணத்தை வைப்பு செய்திருந்தார்கள். அங்கு வைப்பிலிடப்பட்டிருந்த பணத்தை அடையாளம் காண முடியவில்லையென வைத்தாலும், அங்கு வைப்பிலிடப்பட்டிருந்த தங்கத்தை தானே எடுத்து அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக அப்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இந்த சபையிலும் கூறியிருக்கிறார். இந்த நகைகளுக்கு என்ன நடந்தது?

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள், அதற்கான ஆதாரமாக அடகுச்சீட்டுக்களை வைத்துள்ளனர். ஆனால் அவர்களுடைய நகைகளும் பணங்களும் அப்போதைய மஹிந்த குடும்பத்தினதும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவினதும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.

ஆனால், இன்று வரை அந்த மக்கள் தங்கமும் நகையும் கிடைக்காமல் அவை கிடைக்குமென காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? இந்த ஊழலுக்கு என்ன விசாரணை? யார் விசாரிக்கப் போகிறீர்கள்? விசாரணை நடக்காது.

மத்திய வங்கியில் பிணைமுறி ஊழல் இந்த நாட்டின் மிகப்பெரிய ஊழல். உலகின் எந்த நாட்டிலும் நடக்காத அளவில் மிகப்பாரியளவில் கொள்ளையடிக்கப்பட்டது. 

ஆனால் இன்று கொள்ளையடித்தவர்கள் எல்லோரும் பெரும் பெரும் பதவிகளில் உள்ளனர். இந்த நாட்டில் அவர்கள் ஓடி உலாவித் திரிகிறார்கள். 


பலர் வெளிநாடுகளில் ஒளிந்துள்ளனர். இந்த நாடு இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? யாரையாவது கைது செய்ததா? ஏற்கெனவே தங்க நகை விடயத்தில் யாரையாவது கைது செய்ததா? யாரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது? தமிழீழ வைப்பகத்தின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது? நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்த புலிகளின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது? குமரன் பத்மநாதனை கைது செய்து அவரிடமிருந்து பறித்த பணத்துக்கு என்ன நடந்தது? இதை விசாரியுங்கள். இதை விசாரித்தால் இந்த நாட்டின் ஊழல் இல்லாமல் போகும்.

ராஜபக்ஷ குடும்பத்தினர் உகண்டாவிலும் இன்னும் பல நாடுகளிலும் பல முதலீடுகளை செய்துள்ளனர். அவர்களின் பணம் அந்த நாடுகளில் எப்படி முதலீடு செய்யப்பட்டது? எப்படி, எவ்வளவு தங்கம், பணம் முதலீடு செய்யப்பட்டது என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா? முடியாது. 

பிறகு ஊழலுக்கு ஒரு சட்டம், விவாதம். பிறகு அதை நிறைவேற்றுவது. இப்படியெல்லாம் செய்து காலத்தை இழுத்தடித்து கண்துடைப்பு நடவடிக்கையாகவே இந்த சபை நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன என்றார்.


தமிழரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் கோட்டா, மஹிந்தவின் வங்கிக் கணக்கில் - சிறீதரன் எம்.பி. பகிரங்கம் samugammedia தமிழீழ வைப்பகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், பணம் ஆகியன ராஜபக்ஷக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.உலகத்தின் எந்த நாட்டிலும் நடக்காத விதத்தில் இலங்கை மத்திய வங்கியில் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இதையெல்லாம் செய்தவர்கள் இன்று உயர் பதவிகளில் உள்ளனர். சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கையெடுக்க முடியாத நிலையில், எதற்காக ஊழல் ஒழிப்புச் சட்டம், அதற்கு ஒரு விவாதம்.இப்படியாக பாராளுமன்றம் காலத்தை இழுத்தடிக்கும் வேலைகளையே செய்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன்.அவர் மேலும் உரையாற்றுகையில்,தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையில் மோதல் நடந்தபோது, பல தமிழ் மக்கள் தமிழீழ வைப்பகத்தில் நிறைய தங்கத்தை அடகு வைத்திருந்தார்கள். நிறைய பணத்தை வைப்பு செய்திருந்தார்கள். அங்கு வைப்பிலிடப்பட்டிருந்த பணத்தை அடையாளம் காண முடியவில்லையென வைத்தாலும், அங்கு வைப்பிலிடப்பட்டிருந்த தங்கத்தை தானே எடுத்து அரசாங்கத்திடம் ஒப்படைத்ததாக அப்போதைய இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இந்த சபையிலும் கூறியிருக்கிறார். இந்த நகைகளுக்கு என்ன நடந்ததுதமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்தவர்கள், அதற்கான ஆதாரமாக அடகுச்சீட்டுக்களை வைத்துள்ளனர். ஆனால் அவர்களுடைய நகைகளும் பணங்களும் அப்போதைய மஹிந்த குடும்பத்தினதும் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவினதும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.ஆனால், இன்று வரை அந்த மக்கள் தங்கமும் நகையும் கிடைக்காமல் அவை கிடைக்குமென காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் இந்த ஊழலுக்கு என்ன விசாரணை யார் விசாரிக்கப் போகிறீர்கள் விசாரணை நடக்காது.மத்திய வங்கியில் பிணைமுறி ஊழல் இந்த நாட்டின் மிகப்பெரிய ஊழல். உலகின் எந்த நாட்டிலும் நடக்காத அளவில் மிகப்பாரியளவில் கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால் இன்று கொள்ளையடித்தவர்கள் எல்லோரும் பெரும் பெரும் பதவிகளில் உள்ளனர். இந்த நாட்டில் அவர்கள் ஓடி உலாவித் திரிகிறார்கள். பலர் வெளிநாடுகளில் ஒளிந்துள்ளனர். இந்த நாடு இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுத்ததா யாரையாவது கைது செய்ததா ஏற்கெனவே தங்க நகை விடயத்தில் யாரையாவது கைது செய்ததா யாரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது தமிழீழ வைப்பகத்தின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது நீங்கள் கோடி கோடியாக கொள்ளையடித்த புலிகளின் சொத்துக்களுக்கு என்ன நடந்தது குமரன் பத்மநாதனை கைது செய்து அவரிடமிருந்து பறித்த பணத்துக்கு என்ன நடந்தது இதை விசாரியுங்கள். இதை விசாரித்தால் இந்த நாட்டின் ஊழல் இல்லாமல் போகும்.ராஜபக்ஷ குடும்பத்தினர் உகண்டாவிலும் இன்னும் பல நாடுகளிலும் பல முதலீடுகளை செய்துள்ளனர். அவர்களின் பணம் அந்த நாடுகளில் எப்படி முதலீடு செய்யப்பட்டது எப்படி, எவ்வளவு தங்கம், பணம் முதலீடு செய்யப்பட்டது என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா முடியாது. பிறகு ஊழலுக்கு ஒரு சட்டம், விவாதம். பிறகு அதை நிறைவேற்றுவது. இப்படியெல்லாம் செய்து காலத்தை இழுத்தடித்து கண்துடைப்பு நடவடிக்கையாகவே இந்த சபை நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement