இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 2.15 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் இந்திய சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.
பாம்பன் முந்தல் முனை பகுதியில் இன்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகொன்றில் குறித்த கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து நாட்டுப் படகில் தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதை அடுத்து பாம்பன் கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது இலங்கையிலிருந்து சந்தேகத்துக்கு இடமாக ஒரு நாட்டு படகு அதிவேகமாக வந்துள்ளது.
அதனை மடக்கி பிடித்து விசாரணையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் முற்பட்டபோது, படகில் இருந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் படகை விட்டுவிட்டு தம்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படகில் இருந்த 3.5 கிலோ தங்கத்தை சுங்கத்துரை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தங்கத்தை இலங்கையில் இருந்து யார் கொண்டு வந்தார்கள் தப்பி ஓடியவர்கள் யார் என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கடத்தி வரப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 2.25 கோடி இருக்கு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட தங்கம் இந்தியாவில் மீட்பு. samugammedia இலங்கையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 2.15 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்கம் இந்திய சுங்கத்துறை கைப்பற்றியுள்ளது.பாம்பன் முந்தல் முனை பகுதியில் இன்று அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது படகொன்றில் குறித்த கடத்தல் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.இலங்கையிலிருந்து நாட்டுப் படகில் தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதை அடுத்து பாம்பன் கடல் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது இலங்கையிலிருந்து சந்தேகத்துக்கு இடமாக ஒரு நாட்டு படகு அதிவேகமாக வந்துள்ளது.அதனை மடக்கி பிடித்து விசாரணையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் முற்பட்டபோது, படகில் இருந்தவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் படகை விட்டுவிட்டு தம்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் படகில் இருந்த 3.5 கிலோ தங்கத்தை சுங்கத்துரை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்கத்தை இலங்கையில் இருந்து யார் கொண்டு வந்தார்கள் தப்பி ஓடியவர்கள் யார் என்ற பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.மேலும் கடத்தி வரப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு 2.25 கோடி இருக்கு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.