• Apr 27 2024

மீண்டும் அரசியலில் கோட்டபாய...! மீள்எழுச்சிக்கு வாய்ப்பில்லை என்கின்றார் வினோ எம்.பி...!samugammedia

Sharmi / Sep 14th 2023, 4:23 pm
image

Advertisement

கோட்டபாய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வருவதென்பது ஒட்டுமொத்தமாக இலங்கை மக்கள் அவரை நிராகரித்துள்ளார்கள். தேர்தலில் அவரை ஆதரித்தாலும் கூட பின்பு அவர் மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி தப்பி சென்றவர். மீண்டும் அரசியலில் வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதே கட்சியினை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போன்ற ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையாகத்தான் இருக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14)  இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டபாய மட்டுமல்ல அவர்களின் கட்சியாக இருக்கலாம் அவர்களின் குடும்ப பின்னணியினை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை இனிமேல் குறிப்பிட்ட காலங்களுக்கு வரப்போவதில்லை. அவரின் இந்த முடிவு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பினை கொண்டுவரும் நிலையில் சிறுபான்மையினத்தவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பரபரப்பான சூழ்நிலையில் சணல் 4 வெளியிட்ட தகவல் அடிப்படையில் அவர்கள் இனி அரசியல் செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்று நிருபித்திருக்கின்றது.

அனேகமாக அந்த விடயம் மிகவிரைவில் பிரிட்டிஸ் அரசாங்கம் கூட இது சம்மந்தமான தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கின்றது.

இவ்வாறு தப்பிக்கமுடியாத நிலை இருக்கும் போது இவர்கள் அரசியலுக்கு மீண்டும் கோத்தபாய ராஜபக்ச வருவது என்பது ஒரு வெகுளித்தனமான கருத்தாக இருக்கின்றது.

ஒட்டுமொத்தமாக இங்குள்ள மக்கள் கோட்டபாய ராஜபக்ச ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பது எங்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சணல் 4 வெளியிட்டுள்ள விடையத்தில் பல உண்மையான விடையங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் இவ்வாறு தெரியப்படுத்தப்படவில்லை  ஆகவே இந்த விடையத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது எங்களுக்கு மாத்திரமல்ல இங்கள்ள அனைத்து அமைப்புக்கள் சர்வதேச ரீதியாககூட இருக்கின்ற அமைப்புக்கள் சமாதானத்திற்கான நீதிக்கான அமைப்புக்கள் இன்று சர்வதேச விசாரணை தேவை இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்குழுக்களை போட்டாலும் ஆணைக்குழுக்களை நியமித்தாலும் அது அரசிற்கு ஆதரவாக போகுமே தவிர நிச்சயமாக உண்மை வெளிவரப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்தவகையில் சர்வதேச விசாரணையினைதான் ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்த்திருக்கின்றது.

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை நாங்கள் கோரியபோது இங்குள்ள ஏனைய தரப்புக்கள் யாருமே சர்வதேச விசாரணையினை கோரவில்லை.  இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் சணல் 4 காணொளியும் வெளிவந்ததன் பின்னர்தான் உண்மையில் சர்வதேச விசாரணையினை எல்லோரும் கோருகின்றார்கள்.

நாங்கள் ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஜனநாயத்திற்கு முரணான மனித உரிமைகள் மீறிய ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சர்வதேச விசாரணைதான் தேவை என்பதை கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இப்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச விசாரணையினை கோருகின்றார்கள்.

ஜெனீவா மனிதஉரிமை கூட்டத்தொடரில் கூட இந்த விடயம் உள்வாங்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வினை பெற்றுத்தரமுடியாது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை பெற்றுத்தரமுடியாது என்ற நிலமை இன்று வந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச விசாரணைதான் தேவை என்று எல்லா பக்கங்களிலும் இருந்து வருவதனால் அந்த விசாரணைக்கு அரசாங்கம் செல்லவேண்டும் அதைவிடுத்து குழுக்கள் அமைத்து காலத்தினை கடத்தி அதன் ஊடாக அதனை இல்லாமல் செய்துவிடுவார்கள்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் சிங்களத் தரப்பு வெல்ல வேண்டும் என்பதற்காக சிங்கள தரப்பின் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திடம் இந்த பிரச்சினையினை கொடுக்கமுடியாது எங்களின் நிபுணர்களை கொண்டு இங்கே உள்ளவர்களை கொண்டு நாங்கள் கண்டறிவோம் என்று ஜனாதிபதி கொண்டுவருகின்ற இந்த விடையத்தில் கூட சிங்களத் தரப்பினை தனக்கு சார்பாக கொண்டுவரும் மறைமுக திட்டமாகத்தான் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மீண்டும் அரசியலில் கோட்டபாய. மீள்எழுச்சிக்கு வாய்ப்பில்லை என்கின்றார் வினோ எம்.பி.samugammedia கோட்டபாய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வருவதென்பது ஒட்டுமொத்தமாக இலங்கை மக்கள் அவரை நிராகரித்துள்ளார்கள். தேர்தலில் அவரை ஆதரித்தாலும் கூட பின்பு அவர் மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி தப்பி சென்றவர். மீண்டும் அரசியலில் வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதே கட்சியினை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போன்ற ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையாகத்தான் இருக்கும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(14)  இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கோட்டபாய மட்டுமல்ல அவர்களின் கட்சியாக இருக்கலாம் அவர்களின் குடும்ப பின்னணியினை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை இனிமேல் குறிப்பிட்ட காலங்களுக்கு வரப்போவதில்லை. அவரின் இந்த முடிவு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பினை கொண்டுவரும் நிலையில் சிறுபான்மையினத்தவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பரபரப்பான சூழ்நிலையில் சணல் 4 வெளியிட்ட தகவல் அடிப்படையில் அவர்கள் இனி அரசியல் செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்று நிருபித்திருக்கின்றது.அனேகமாக அந்த விடயம் மிகவிரைவில் பிரிட்டிஸ் அரசாங்கம் கூட இது சம்மந்தமான தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கின்றது.இவ்வாறு தப்பிக்கமுடியாத நிலை இருக்கும் போது இவர்கள் அரசியலுக்கு மீண்டும் கோத்தபாய ராஜபக்ச வருவது என்பது ஒரு வெகுளித்தனமான கருத்தாக இருக்கின்றது.ஒட்டுமொத்தமாக இங்குள்ள மக்கள் கோட்டபாய ராஜபக்ச ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பது எங்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சணல் 4 வெளியிட்டுள்ள விடையத்தில் பல உண்மையான விடையங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் இவ்வாறு தெரியப்படுத்தப்படவில்லை  ஆகவே இந்த விடையத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது எங்களுக்கு மாத்திரமல்ல இங்கள்ள அனைத்து அமைப்புக்கள் சர்வதேச ரீதியாககூட இருக்கின்ற அமைப்புக்கள் சமாதானத்திற்கான நீதிக்கான அமைப்புக்கள் இன்று சர்வதேச விசாரணை தேவை இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்குழுக்களை போட்டாலும் ஆணைக்குழுக்களை நியமித்தாலும் அது அரசிற்கு ஆதரவாக போகுமே தவிர நிச்சயமாக உண்மை வெளிவரப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.அந்தவகையில் சர்வதேச விசாரணையினைதான் ஒட்டுமொத்த தமிழினம் எதிர்பார்த்திருக்கின்றது.கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை நாங்கள் கோரியபோது இங்குள்ள ஏனைய தரப்புக்கள் யாருமே சர்வதேச விசாரணையினை கோரவில்லை.  இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் சணல் 4 காணொளியும் வெளிவந்ததன் பின்னர்தான் உண்மையில் சர்வதேச விசாரணையினை எல்லோரும் கோருகின்றார்கள்.நாங்கள் ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஜனநாயத்திற்கு முரணான மனித உரிமைகள் மீறிய ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சர்வதேச விசாரணைதான் தேவை என்பதை கேட்டுக்கொண்டிருக்கின்றோம்.இப்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச விசாரணையினை கோருகின்றார்கள்.ஜெனீவா மனிதஉரிமை கூட்டத்தொடரில் கூட இந்த விடயம் உள்வாங்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வினை பெற்றுத்தரமுடியாது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை பெற்றுத்தரமுடியாது என்ற நிலமை இன்று வந்துள்ளது.இந்த நிலையில் சர்வதேச விசாரணைதான் தேவை என்று எல்லா பக்கங்களிலும் இருந்து வருவதனால் அந்த விசாரணைக்கு அரசாங்கம் செல்லவேண்டும் அதைவிடுத்து குழுக்கள் அமைத்து காலத்தினை கடத்தி அதன் ஊடாக அதனை இல்லாமல் செய்துவிடுவார்கள்.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் சிங்களத் தரப்பு வெல்ல வேண்டும் என்பதற்காக சிங்கள தரப்பின் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திடம் இந்த பிரச்சினையினை கொடுக்கமுடியாது எங்களின் நிபுணர்களை கொண்டு இங்கே உள்ளவர்களை கொண்டு நாங்கள் கண்டறிவோம் என்று ஜனாதிபதி கொண்டுவருகின்ற இந்த விடையத்தில் கூட சிங்களத் தரப்பினை தனக்கு சார்பாக கொண்டுவரும் மறைமுக திட்டமாகத்தான் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement