• May 10 2024

ஜனாதிபதி வேட்பாளரை பரித்துரைத்த கோட்டாபய! நிராகரித்தார் மஹிந்த samugammedia

Chithra / Apr 9th 2023, 11:25 am
image

Advertisement

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டிய ஒருவர் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக பெரும்பங்கு ஆற்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும், அதனை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதி வேட்புமனு பற்றி பேசுவதற்கு இது பொருத்தமான நேரமல்ல என்றும், குறித்த நபரை பொதுஜன பெரமுன வேட்பாளராக குறிப்பிட முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

ஜனாதிபதி வேட்பாளரை பரித்துரைத்த கோட்டாபய நிராகரித்தார் மஹிந்த samugammedia அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டிய ஒருவர் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக பெரும்பங்கு ஆற்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், இந்த பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாகவும், அதனை மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.ஜனாதிபதி வேட்புமனு பற்றி பேசுவதற்கு இது பொருத்தமான நேரமல்ல என்றும், குறித்த நபரை பொதுஜன பெரமுன வேட்பாளராக குறிப்பிட முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

Advertisement

Advertisement

Advertisement