• May 18 2024

இம்மாத இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் அரச ஊழியர்கள்! வெளியான தகவல்

Chithra / Dec 3rd 2022, 2:07 pm
image

Advertisement

இம்மாதம் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச ஊழியர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதன் பிரதானிகள் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி 60 வயதை எட்டும் அதிகாரிகள் 27 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் சேவை நீடிப்பை பெறுவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினாலும் கூட ஒட்டுமொத்த அரச சேவையும் சிக்கலில் சிக்குவதை தடுக்க முடியாது.

எனவே, எவருக்கும் சேவை நீடிப்பை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு இடையில் 60 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டும் என ஓய்வூதியத் திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்மாத இறுதியில் வீட்டிற்கு செல்லப்போகும் அரச ஊழியர்கள் வெளியான தகவல் இம்மாதம் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியாகும் அரச ஊழியர்கள் எவருக்கும் சேவை நீடிப்பை வழங்கப் போவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் நிதியமைச்சின் செயலாளர் மற்றும் அதன் பிரதானிகள் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி 60 வயதை எட்டும் அதிகாரிகள் 27 பேர் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.இந்த நிலையில் அவர்கள் சேவை நீடிப்பை பெறுவதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கினாலும் கூட ஒட்டுமொத்த அரச சேவையும் சிக்கலில் சிக்குவதை தடுக்க முடியாது.எனவே, எவருக்கும் சேவை நீடிப்பை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு இடையில் 60 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டும் என ஓய்வூதியத் திணைக்களம் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement