• May 03 2024

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - கைத்தொழில் அமைச்சர் கருத்து!

Sharmi / Jan 3rd 2023, 12:38 pm
image

Advertisement

நாட்டில் இறக்குமதிச் செலவைக் குறைப்பது, இறக்குமதி மாற்றுப் பொருட்களை அதிகரிப்பது மற்றும் உற்பத்திக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் அதற்காக அரசாங்கம் தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகவும் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் காலி அக்மீமன பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விசேட வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கைத்தொழில் கொள்கையின் ஊடாக, தேவையான உற்பத்திப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புச் சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, உற்பத்திச் செயல்பாட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆட்டோமொபைல் தொடர்பான உற்பத்தித் தொழில்,மருந்துத் தொழில், கனிமத்துடன் தொடர்புடைய மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தித் தொழில் போன்ற தொழில்கள் வளங்கள், முதலியன அதிக ஏற்றுமதி வருமானத்திற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறினார். 

இதன்போது, ​​இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைமையில் ஆடைத்தொழில் தொடர்பான தொழில்நுட்ப கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை கைத்தொழில் அமைச்சர் வழங்கிவைத்ததுடன், தேசிய கைத்தொழில் சிறப்புப் போட்டியில் காலி மாவட்ட வெற்றியாளர்களை மதிப்பீடு செய்தார்.

அத்துடன், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ் காலி மாவட்டத்தில் ஆடைத் தொழில் தொடர்பான தொழில்நுட்ப அறிவைப் பெற்று தற்போது சிறியளவிலான ஆடைத் தொழிலை மேற்கொண்டு வரும் தெரிவு செய்யப்பட்ட நாற்பது தொழில்முயற்சியாளர்களுக்கு விசேட நிகழ்வாக உரிய இயந்திரங்களும் உபகரணங்களும் வழங்கப்பட்டன. 

கைத்தொழில் அமைச்சின் கீழ், இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபை பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தொழில்முனைவோர் ஆக விரும்புபவர்களுக்கும் தற்போது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. தொழில் தொடங்கஇ விற்பனை ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தஇ சந்தை இடத்தை கண்டறிதல் போன்ற பல நடவடிக்கைகள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, அக்மீமன பிரதேச செயலாளர் பூர்ணிமா அபேசிறிகுணவர்தன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சானக மதுகொட, அக்மீமன பிரதேச சபைத் தலைவர் சேன கலஹேவத்த மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - கைத்தொழில் அமைச்சர் கருத்து நாட்டில் இறக்குமதிச் செலவைக் குறைப்பது, இறக்குமதி மாற்றுப் பொருட்களை அதிகரிப்பது மற்றும் உற்பத்திக் கைத்தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என்றும் அதற்காக அரசாங்கம் தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகவும் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் காலி அக்மீமன பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற விசேட வைபவத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து உரையாற்றுகையில்புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கைத்தொழில் கொள்கையின் ஊடாக, தேவையான உற்பத்திப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புச் சூழல் உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, உற்பத்திச் செயல்பாட்டில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை எவ்வாறு அதிகரிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆட்டோமொபைல் தொடர்பான உற்பத்தித் தொழில்,மருந்துத் தொழில், கனிமத்துடன் தொடர்புடைய மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தித் தொழில் போன்ற தொழில்கள் வளங்கள், முதலியன அதிக ஏற்றுமதி வருமானத்திற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறினார். இதன்போது, ​​இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைமையில் ஆடைத்தொழில் தொடர்பான தொழில்நுட்ப கற்கை நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை கைத்தொழில் அமைச்சர் வழங்கிவைத்ததுடன், தேசிய கைத்தொழில் சிறப்புப் போட்டியில் காலி மாவட்ட வெற்றியாளர்களை மதிப்பீடு செய்தார்.அத்துடன், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ் காலி மாவட்டத்தில் ஆடைத் தொழில் தொடர்பான தொழில்நுட்ப அறிவைப் பெற்று தற்போது சிறியளவிலான ஆடைத் தொழிலை மேற்கொண்டு வரும் தெரிவு செய்யப்பட்ட நாற்பது தொழில்முயற்சியாளர்களுக்கு விசேட நிகழ்வாக உரிய இயந்திரங்களும் உபகரணங்களும் வழங்கப்பட்டன. கைத்தொழில் அமைச்சின் கீழ், இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபை பல நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தொழில்முனைவோர் ஆக விரும்புபவர்களுக்கும் தற்போது அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. தொழில் தொடங்கஇ விற்பனை ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தஇ சந்தை இடத்தை கண்டறிதல் போன்ற பல நடவடிக்கைகள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும, அக்மீமன பிரதேச செயலாளர் பூர்ணிமா அபேசிறிகுணவர்தன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சானக மதுகொட, அக்மீமன பிரதேச சபைத் தலைவர் சேன கலஹேவத்த மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement