• May 02 2024

குக் வித் கோமாளியில் ஜி.பி முத்து: ரசிகர்கள் உற்சாகம்!

Sharmi / Jan 7th 2023, 10:21 pm
image

Advertisement

தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியில் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்க இருக்கிறது.

அதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில், அது படு வைரலாகியுள்ளது. காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.


ஆனால், அவர் போட்டியாளரா? இல்லை கோமாளியா? என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றவர் தான் ஜிபி முத்து. ஆனால், அவர் கொஞ்ச நாட்களுக்குமேல் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை, பையன் மற்றும் குடும்ப ஞாபகமாக இருப்பதாக கூறி அழுது கொண்டே இருந்தார். ஆனால், அவரை பிக்பாஸ் குழுவினர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பலனளிக்கவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறுவதில் உறுதியாக இருந்தார். இதனை கருத்தில் கொண்ட பிக்பாஸ் ஜிபி முத்துவை வீட்டில் இருந்து வெளியேற்றினர். 


வீட்டிற்கு வெளியே வந்தவுடன் வழக்கம்போல் பிஸியான ஜிபி முத்து யூடியூப் சேனல்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். படங்களில் நடிப்பதிலும், சினிமா புரோமோஷன்களிலும் பங்கேற்று வந்த அவர், தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.


போட்டியாளராக இருக்கிறாரா? அல்லது கோமாளியாக இருக்கப்போகிறாரா என்பது புரோமோவில் குறிப்பிடவில்லை.


பிக்பாஸில் இருந்து போன அவருக்கு மீண்டும் குக் வித் கோமாளி ஷோவில் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





குக் வித் கோமாளியில் ஜி.பி முத்து: ரசிகர்கள் உற்சாகம் தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியில் விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 தொடங்க இருக்கிறது. அதற்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில், அது படு வைரலாகியுள்ளது. காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால், அவர் போட்டியாளரா இல்லை கோமாளியா என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றவர் தான் ஜிபி முத்து. ஆனால், அவர் கொஞ்ச நாட்களுக்குமேல் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியவில்லை, பையன் மற்றும் குடும்ப ஞாபகமாக இருப்பதாக கூறி அழுது கொண்டே இருந்தார். ஆனால், அவரை பிக்பாஸ் குழுவினர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பலனளிக்கவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறுவதில் உறுதியாக இருந்தார். இதனை கருத்தில் கொண்ட பிக்பாஸ் ஜிபி முத்துவை வீட்டில் இருந்து வெளியேற்றினர். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் வழக்கம்போல் பிஸியான ஜிபி முத்து யூடியூப் சேனல்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். படங்களில் நடிப்பதிலும், சினிமா புரோமோஷன்களிலும் பங்கேற்று வந்த அவர், தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். போட்டியாளராக இருக்கிறாரா அல்லது கோமாளியாக இருக்கப்போகிறாரா என்பது புரோமோவில் குறிப்பிடவில்லை. பிக்பாஸில் இருந்து போன அவருக்கு மீண்டும் குக் வித் கோமாளி ஷோவில் வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஜிபி முத்துவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement