• Sep 22 2024

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை - மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள்! samugammedia

Tamil nila / Oct 14th 2023, 6:05 pm
image

Advertisement

ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. 

இதன் போது இரண்டாம் பகுதியை முதலாவதாகவும் , முதற் பகுதியை இறுதியாகவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதி சற்று கடினமானது என்பதால் மாணவர்கள் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்கும் போது மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்கள் விடையளிக்கக் கூடிய நேரத்தை மீதப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

எனவே மாணவர்கள் பதற்றம் இன்றி இரண்டாம் பாகத்தை செய்து முடித்த பின் முதல் பாகத்தை ஆறுதலாக செய்ய முயற்சி செய்யுங்கள்

அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை - மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றங்கள் samugammedia ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதன் போது இரண்டாம் பகுதியை முதலாவதாகவும் , முதற் பகுதியை இறுதியாகவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.முதல் பகுதி சற்று கடினமானது என்பதால் மாணவர்கள் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்கும் போது மனதளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விடையளிக்கக் கூடிய நேரத்தை மீதப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே மாணவர்கள் பதற்றம் இன்றி இரண்டாம் பாகத்தை செய்து முடித்த பின் முதல் பாகத்தை ஆறுதலாக செய்ய முயற்சி செய்யுங்கள்அனர்த்த நிலைமைகள் ஏற்படும் எந்த இடத்திலும் இருக்கும் சகல பரீட்சார்த்திகளும் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையங்களுக்கு அறியப்படுத்துமாறு பரீட்சை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், புலமைப்பரிசில் பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் ஒத்துழைப்பை எதிர்ப்பார்த்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் எச்.ஜே.எம்.சி ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement